Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 1.2 (வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டம்)

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.2 (வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டம்) | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.2 (வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டம்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.2 (வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டம்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.2


1. கோடிட்ட இடத்தை நிரப்புக.

i. வட்டத்திலுள்ள அனைத்து ஆரங்களும் சமம்

ii. வட்டத்தின் மிக நீளமான நாண் விட்டம் ஆகும்.

iii. வட்டத்தின் மையத்திற்கும் வட்டத்தின் மேல் ஏதேனும் உள்ள ஒரு புள்ளிக்கும் இடைப்பட்ட துரம் வட்டத்தின் ஆரம் என்று அழைக்கப்படுகிறது.

iv. வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு நாண் ஆகும்.

v. ஆரத்தின் இரு மடங்கு விட்டம் ஆகும்.

vi. பக்கங்கள் இல்லாத வடிவம் வட்டம் ஆகும்.


2. பின்வரும் ஆர அளவுகள் கொண்ட வட்டத்தின் விட்டத்தைக் காண்க.

i. ஆரம் = 10 செ.மீ

ii. ஆரம் = 8 செ.மீ 

iii. ஆரம் = 6 செ.மீ

விடை:

1. ஆரம் = 10 செ.மீ

விட்டம் = 2 × ஆரம்

= 2 × 10

விட்டம் = 20 செ.மீ

2. ஆரம் = 8 செ.மீ

விட்டம் = 2 × ஆரம்

= 2 × 8

விட்டம் = 16 செ.மீ

3. ஆரம் = 6 செ.மீ

விட்டம் = 2 × ஆரம்

= 2 × 6

விட்டம் = 12 செ.மீ


3. பின்வரும் விட்டங்கள் கொண்ட வட்டத்தின் ஆரத்தைக் காண்க.

i. விட்டம் = 14 செ.மீ 

ii. விட்டம் = 20 செ.மீ 

iii. விட்டம் = 6 செ.மீ 

விடை:

i. விட்டம் = 14 செ.மீ 

ஆரம் = விட்டம் /2 

= 14/2

ஆரம் = 7 செ.மீ

ii. விட்டம் = 20 செ.மீ 

ஆரம் = விட்டம் / 2 

= 20/2

ஆரம் = 10 செ.மீ

iii. விட்டம் = 6 செ.மீ 

 ஆரம் = விட்டம் / 2

= 6/2

ஆரம் = 3 செ.மீ 

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்