Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டம்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டம் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டம்

மிகச் சரியான வளையமாக உள்ள வடிவம் வட்டமாகும். இதற்குப் பக்கங்கள் கிடையாது மற்றும் மூலைவிட்டங்களும் கிடையாது.


வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டம்

மிகச் சரியான வளையமாக உள்ள வடிவம் வட்டமாகும். இதற்குப் பக்கங்கள் கிடையாது மற்றும் மூலைவிட்டங்களும் கிடையாது. 'O' வட்டத்தின் மையமாகும். A என்பது வட்டத்தின் மீதுள்ள ஒரு புள்ளியாகும். வட்டத்தின் மையம் O மற்றும் Aக்கு இடையேயான தூரம் ஆரம் என்று அழைக்கப்படுகிறது.


வட்டத்தின் மையத்திற்கும் வட்டத்தின் மேல் உள்ள ஒரு புள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு வட்டத்தின் ஆரம் என்று அழைக்கப்படுகிறது.

A, B, C, D, E ஆகியவை வட்டத்தின் மீதுள்ள புள்ளிகள் ஆகும். OA, OB, OC, OD மற்றும் OE ஆகியவை வட்டத்தின் ஆரங்களாகும். வட்டத்தின் ஆரங்கள் சம நீளமானவை (OA=OB=OC=OD=OE)

ஒரு வட்டத்தில் உள்ள அனைத்து ஆரங்களும் சம நீளமுள்ளவை

வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு நாண் ஆகும். L, M, A, B, X மற்றும் Y ஆகியவை வட்டத்தின் மீதுள்ள புள்ளிகள் ஆகும். மேலும் LM, AB, XY ஆகிய கோட்டுத்துண்டுகள் நாண் ஆகும்.

வட்டத்தின் மையம் O வழியே செல்லும் நாண் AB ஆனது வட்டத்தின் விட்டமாகும். வட்டத்தின் மிக நீளமான நாண் விட்டமாகும். விட்டத்தின் பாதி எப்போதும் ஆரம் ஆகும்.

வட்டத்தின் மிக நீளமான நாண் விட்டம் எனப்படுகிறது.


எடுத்துக்காட்டுகள்

1. ஆரம் 5 செ.மீ கொண்ட வட்டத்தின் விட்டத்தினைக் காண்க.

விட்டம் = 2 × ஆரம் 

ஆரம் = விட்டம் / 2


ஆரம் = 5 செ.மீ

விட்டம் = 2 × ஆரம்

= 2 × 5

விட்டம் = 10 செ.மீ

2. விட்டம் 18 செ.மீ கொண்ட வட்டத்தின் ஆரம் என்ன?

ஆரம் = விட்டம் / 2 = 18 / 2


ஆரம் = 9 செ.மீ.


செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டத்தினை அளந்து எழுதுக.



செயல்பாடு

ஒரு வட்டம் வரைந்து அதன் மீது சில புள்ளிகளைக் குறிக்கவும். ஒவ்வொரு புள்ளியையும் வட்டத்தின் மையத்தையும் இணைக்கும் கோட்டுத்துண்டைகளை வரையவும். பின் கோட்டுத்துண்டுகளின் நீளங்களை அளந்து அவை சம அளவிலானவையா என ஆராயவும்.

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்