Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்

முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்

முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்


கன சதுரம்


• 6 முகங்களைக் கொண்டது

• 12 விளிம்புகளைக் கொண்டது

• 8 முனைகளைக் கொண்டது.

• ஆறு முகங்களும் சமமானவை.

எடுத்துக்காட்டு

பகடை, கன சதுரம், கன சதுர பனிக்கட்டி, கட்டுமான தளவாடங்கள், ரூபிக் கன சதுரம்


கன செவ்வகம்


• 6 முகங்களைக் கொண்டது

• 12 விளிம்புகளைக் கொண்டது

• 8 முனைகளைக் கொண்டது.

• எதிரெதிர் முகங்கள் சமமானவை.

எடுத்துக்காட்டு

தீப்பெட்டி, செங்கல், அழிப்பான், புத்தகம், பற்பசை பெட்டி.


கோளம்


• ஒரே ஒரு வளைதள முகத்தைக் கொண்டது.

• முனைகள் மற்றும் விளிம்புகள் கிடையாது.

எடுத்துக்காட்டு

பந்து, உலக உருண்டை, லட்டு


கூம்பு


• ஒரு சமதள முகத்தையும், ஒரு வளைதள முகத்தையும் கொண்டது.

• ஒரு முனை மட்டும் கொண்டது.

எடுத்துக்காட்டு

பனிக்கூழ் கூம்பு, விழாத்தொப்பி


உருளை


• 2 சமதள முகங்களையும் ஒரு வளைதள முகத்தையும் கொண்டது.

• விளிம்புகள் மற்றும் முனைகள் இல்லை.

எடுத்துக்காட்டு

உறிஞ்சு குழாய், சமையல் எரிவாயு உருளை, குழாய்


களிமண் மற்றும் காகித மடிப்பு முறை வழியாக முப்பரிமாண பொருள்களை உருவாக்குதல்.

முப்பரிமாண வடிவங்களை உருவாக்கப் பயன்படும் இருபரிமான (2D) வடிவ அமைப்பு வலை எனப்படும். வலையைப் பயன்படுத்தி வீடுகளின் தரை வரைபடங்கள், கட்டிட வரைபடங்கள், பாலங்களின் வரைபடங்கள் மேலும் பல வரைபடங்களை உருவாக்கலாம்.


இவற்றை முயல்க

முப்பரிமாண வடிவங்களை களிமண்ணைக் கொண்டு உருவாக்குக.


செயல்பாடுகள்

. கொடுக்கப்பட்டுள்ள வலைகளை மடித்து கனசதுரத்தை உருவாக்குக



. கீழ்காணும் வலைகளைக் கொண்டு கனசெவ்வகத்தை உருவாக்குக.




. அரைவட்ட வடிவத் தாளைக் கொண்டு கூம்பை உருவாக்குக.




. செவ்வக வடிவத் தாளைக் கொண்டு உருளையை உருவாக்குக.



4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்