வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.7 (முப்பரிமாண உருவங்களின் (3D) பண்புகள்) | 4th Maths : Term 1 Unit 1 : Geometry
பயிற்சி 1.7
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
i. ஒரு கனசெவ்வகம் ______ விளிம்புகளைக் கொண்டது.
அ) 6
ஆ) 8
இ) 12
விடை: இ) 12
ii. பகடை __________ வடிவமானது.
அ) கனசெவ்வகம்
ஆ) கனசதுரம்
இ) கோளம்
விடை: ஆ) கன சதுரம்
iii. __________ க்கு ஒரு வளைதள முகமும் மற்றும் இரண்டு சமதள முகங்களும் உள்ளது.
அ) உருளை
ஆ) கூம்பு
இ) கோளம்
விடை: அ) உருளை
iv. எனக்கு ஒரு முனையும் ஒரு சமதள முகமும் உண்டு. நான் ஒரு _____
அ) கூம்பு
ஆ) உருளை
இ) கோளம்
விடை: அ) கூம்பு
v. ஒரு கனசதுரம் ___________ முனைகளைக் கொண்டது.
அ) 8
ஆ) 12
இ) 6
விடை: அ) 8