வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry
கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல்
கவராயம் ஒரு பக்கம் கூரிய முனையும் மறுபக்கம் பென்சில் பொருத்தகூடிய திருகு அமைப்பும் கொண்ட கருவி ஆகும்.

எடுத்துக்காட்டு
5 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினைக் கவராயத்தைப் பயன்படுத்தி வரைக.
படி 1 கவராயத்தை எடுத்து அதில் பென்சிலைப் பொருத்துக.
படி 2 அளவுகோலின் உதவியுடன் 5 செ.மீ அளவினைக் கவராயத்தைப் பயன்படுத்தி எடுக்க.
படி 3 கவராயத்தின் கூர்முனையைத் தாளின் மீதுள்ள ஒரு புள்ளியில் பொருத்துக.
படி 4 பென்சிலை தொடங்கிய புள்ளியை அடையும் வரை சுழற்றுக.
