பணம் மற்றும் கடன் | பொருளியல் - காகிதப்பணம் | 9th Social Science : Economics: Money and Credit

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்

காகிதப்பணம்

நாளடைவில் இயற்கையான பணத்திலும் சிக்கல்கள் உருவாயின வணிகத்தின் விரிவாக்கத்துக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இருப்பதில்லை. அதே நேரத்தில் சுரங்கங்களிலும் தங்கம், வெள்ளி வரம்புக்குள் தான் இருந்தன. இதனால் குறைந்த மதிப்பு கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன இவை சிறிய மதிப்பிலான பொருள்கள் வாங்கவும் விற்கவும் பயன்படுத்தப்பட்டன. ஏழை எளிய மக்களின் பணமாக இவை பயன்படுத்தப்பட்டன.

இதனால் இந்தக் குறைந்த மதிப்பு நாணயங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டன. இதன் அடுத்த கட்டமாகத்தான் காகிதப் பணம் புழக்கத்துக்கு வந்தது. இந்த உருவமற்ற பணமும் வங்கிகளில் அதனைச் சேமிக்கும் வழக்கமும் வெகுவாகப் புழக்கத்திற்கு வந்தன. அப்போது உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்தமும் இதற்கான காரணங்களில் ஒன்று .

பணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டது. உலகப் பொருளாதாரச் சூழலில் பணம் பல வடிவங்களில் மாறியுள்ளது. மின்னணு உலகில் பணப்பரிமாற்றங்கள் பல முறைகளில் நடைபெறுகின்றன.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்