Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | தாவர உலகம் : முக்கியமான கேள்விகள்

தாவரவியல் - தாவர உலகம் : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

தாவர உலகம் : முக்கியமான கேள்விகள்

மதிப்பீடு, பதில்களுடன் கூடிய பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள், கேள்விக்கு பதிலளிக்கவும்
உலகின் பன்முகத்தன்மை

தாவர உலகம்


மதிப்பீடு

 

1. எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டது?

(அ) டெரிடோஃபைட்கள்

(ஆ) பிரையோஃபைட்கள்

(இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்

(ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

 

2. டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது

(அ) முன்உடலம்

(ஆ) உடலம்

(இ) கூம்பு

(ஈ) வேர்த்தாங்கி

 

3. ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை?

(அ) 7

(ஆ) 14

(இ) 42

(ஈ) 28

 

4. ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவாவது

(அ) கருவுறுதலின் போது

(ஆ) கருவுறுதலுக்கு முன்

(இ) கருவுறுதலுக்குப் பின்

(ஈ) கரு வளரும் போது

 

5. ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலை இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலிலிருந்து வேறுபடுத்துக.

6. ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

7. ’பிக்னோசைலிக்’ பற்றி நீவிர் அறிவது யாது?

8. ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் பொதுவான இரண்டு பண்புகளை எழுதுக?

9. பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

10. பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

11. பாசிகளின் வகுப்புகளை வரிசைப்படுத்துக.

12. டையனோஃபைசி வகுப்பில் உள்ள பாசிகளின் நிறமிகள் மற்றும் உணவு சேமிப்பைப் பற்றி குறிப்பிடுக.

13. நியூக்யூல் என்றால் என்ன?

14. கேராவின் கணு மற்றும் கணுவிடைச் செல்களுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.

15. சைகஸ் கூட்டிலைக் காம்பின் உள்ளமைப்பை விவரி.

 


11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்