Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பணம் - விலைத் தொடர்பு

பொருளியல் - பணம் - விலைத் தொடர்பு | 9th Social Science : Economics: Money and Credit

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்

பணம் - விலைத் தொடர்பு

பணத்துக்கும் பொருள்களின் விலைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. ஏனெனில் தற்போது உலகில்தயாரிக்கப்படும் பொருள்களில் 90 விழுக்காடு விற்பனை அல்லது சேவைத்தொழிலை இலக்காகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. வேளாண்மையிலும் சொந்தத் தேவைக்காக விளைவிப்பதை விட பணப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்யப்படுவது சந்தை மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

பணத்துக்கும் விலைக்கும் உள்ள தொடர்பு பணவியல் கொள்கையோடு தொடர்புடையது.

செயல்பாடு

 வங்கி

உன் வகுப்பறையில் ஒரு மாதிரி வங்கியை அமைக்கவும்.

உன் ஆசிரியரின் வழிகாட்டுதலோடு காசாளர், கிளை மேலாளர், துணை மேலாளர், வாடிக்கையாளர் போல நடிக்கவும்.

பணம் செலுத்துவதற்கான படிவம், காசோலை, கேட்பு வரைவோலை ஆகியவற்றின் மாதிரிகளைத் தயாரிக்கவும்.

வங்கி செயல்பாடுகளைச் செய்யவும்.

பண விநியோக வளர்ச்சிக்கும் நீண்ட கால விலை வீழ்ச்சிக்கும் இடையிலான நெருங்கிய உறவினை நாம் காணமுடியும். ஒரு நாட்டின் பொருளதார நிலைத்தன்மையில் விலைக் கட்டுப்பாட்டுக்கு முக்கியப் பங்களிப்பு உள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனைக் கண்காணித்து வருகிறது.

நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது. உள்நாட்டில் அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி என அழைக்கப்படுகிறது.

உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உலக வணிகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்