இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு - வரைபடத்தாளில் அளவுத்திட்டம் | 8th Maths : Chapter 3 : Algebra
9. வரைபடத்தாளில் அளவுத்திட்டம்
வரைபடத்தாளில் Y ஆனது X இன் பெரிய மடங்குகளாக அமையும் சூழ்நிலையில் வரைபடத்தாளில் வழக்கமாக ஓரலகுகளில் குறிக்கும் அளவு Y ஆயத் தொலைவுக்குப் போதுமானதாக இருக்காது, இது மறுதலைக்கும் பொருந்தும். இவ்வாறான சூழ்நிலைகளில் இரண்டு அச்சுகளுக்கும் தேவைக்கு ஏற்ப அளவுத்திட்டத்தை மாற்றியமைத்துப் பயன்படுத்துகின்றோம். பொருத்தமான அளவுத்திட்டத்தை வரைபடத்தாளில் வலது புற மூலையில் குறிப்பிடுவோம். சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
