Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பிரிவுச் சூத்திரம் (Section Formula)

தேற்றம், எடுத்துக்காட்டு, தீர்வு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு - பிரிவுச் சூத்திரம் (Section Formula) | 9th Maths : UNIT 5 : Coordinate Geometry

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

பிரிவுச் சூத்திரம் (Section Formula)

கோட்டுத் துண்டை இரு சமக்கூறிடுதல் மற்றும் மூன்று சமக்கூறிடுதல் பற்றிக் கற்றோம். இப்போது புள்ளிகள் (x1 , y1 ) (மற்றும் (x2 , y2) ஆகியவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டை m:n என்ற விகிதத்தில் பிரித்தலைக் கற்றுக்கொள்வோம்.

பிரிவுச் சூத்திரம் (Section Formula)

கோட்டுத் துண்டை இரு சமக்கூறிடுதல் மற்றும் மூன்று சமக்கூறிடுதல் பற்றிக் கற்றோம். இப்போது புள்ளிகள் (x1 , y1 ) (மற்றும் (x2 , y2) ஆகியவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டை m:n என்ற விகிதத்தில் பிரித்தலைக் கற்றுக்கொள்வோம்.

ஒரு கோட்டுத்துண்டு AB மற்றும் ஒரு மிகை மெய் எண் r கொடுக்கப்பட்டுள்ளன.


நாம் AB r:1 என்ற விகிதத்தில் பிரிக்கும் புள்ளி P இன் ஆயத் தொலைவுகளைக் காண இருக்கின்றோம்.

அதாவது AP / PB = r / 1 அல்லது AP = r(PB) .

இதிலிருந்து x  − x1 = r(x2  − x)

இதைத் தீர்க்க x = ( rx2 + x1) / (r + 1)     ...... (1)

நாம் இந்த முடிவை ஒரு கோட்டின் மேல் அமைந்துள்ள எந்தவொரு புள்ளிக்கும் பின்வருமாறு பொதுமைப்படுத்தலாம்


AP: PB = r : 1 என எடுக்க, நாம் பெறுவது A'P' : P'B' = r :1.

எனவே A'P' = r(P'B')

ஆகவே, (x  − x1) = r(x2  − x)

இதிலிருந்து நாம் பெறுவது,

x = ( rx2 + x1 ) / (r + 1)        ……[(1) ஐப் பார்க்க ]

இதே வழியில் நாம் பெறுவது y = ( ry2 + y1) / (r + 1) 

A மற்றும் B இக்கு இடையில் P மற்றும் AP / PB = r , எனில் நாம் பெறும் வாய்ப்பாடு P ஆனது

. r ஆனது m/n என எடுக்கப்பட்டால், பிரிவுச் சூத்திரமானது [ ( mx2 + nx1 ) / (m + n) , ( my2 + ny1) / (m + n) ]  , எனக் கிடைக்கிறது. இதுவே நிலையான அமைப்பாகும்.

 

சிந்தனைக் களம்

(i) m = n = 1 எனில் நிகழ்வது என்ன? நாம் முன்பே நிறுவிய முடிவு ஒன்றை அடையாளம் காண முடிகிறதா?

(ii) AP: PB = 1 : 2 மற்றும் AQ : QB = 2:1 எனில் AP : AB என்ன ? AQ : AB என்ன ?

குறிப்பு

புள்ளிகள் (x1 , y1 ) மற்றும் (x2 , y2) இணைக்கும் கோட்டுத்துண்டை Xஅச்சு பிரிக்கும் விகிதம்  − y1 / y2 மற்றும் Yஅச்சு பிரிக்கும் விகிதம்  − x1 / x2.

மூன்று புள்ளிகள் ஒரே கோட்டில் அமையும் எனில், அவற்றின் ஒரு புள்ளி மற்ற இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை r : 1 என்ற விகிதத்தில் பிரிக்கும்.

கொடுக்கப்பட்ட மூன்று புள்ளிகளும் ஒரு கோட்டில் அமையும்பொழுது மட்டுமே பிரிவுச் சூத்திரம் பயன்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்தப் பிரிவுச் சூத்திரமானது ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம், உள்வட்ட மையம், வெளிவட்ட மையம் போன்றவற்றைக் காணப் பயன்படுகிறது. இயற்பியலில் இது பொருளின் பொருண்மை மையம், சமநிலைப் புள்ளிகள் போன்ற பலவற்றில் பயன்படுகிறது.

 

எடுத்துக்காட்டு 5.17

புள்ளிகள் (3,5) மற்றும் (8, −10) ஆகியவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.

தீர்வு


கொடுக்கப்பட்ட புள்ளிகள் A (3,5), B(8, −10) என்க. மேலும் புள்ளி P(x,y) ஆனது கோட்டுத் துண்டு AB 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி என்க.

பிரிவுச் சூத்திரத்தின்படி,

இங்கு , x1 = 3, y1 = 5, x2 = 8, y2 = −10 மற்றும் m = 3, n = 2

ஆகையால்,


 

எடுத்துக்காட்டு 5.18

 A( −3,6) மற்றும் B(1, −2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P( −2,4) ஆனது உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?

தீர்வு


கொடுக்கப்பட்ட புள்ளிகள் A( −3, 6) மற்றும் B(1,  −2) ஆகும். P( −2, 4) ஆனது AB உட்புறமாக m : n என்ற விகிதத்தில் பிரிக்கின்றது என்க.

பிரிவுச் சூத்திரத்தின்படி


 = P( −2,4)                             .....(1)

இங்கு x1 =  −3, y1 = 6, x2 = 1, y2 =  −2


 x  −இன் ஆயத்தொலைவைச் சமப்படுத்த, நாம் பெறுவது (m  − 3n) / (m+n) =  −2 அல்லது m  − 3n =  −2m − 2n

3m = n

m / n = 1 / 3

m : n = 1: 3

P ஆனது AB உட்புறமாக 1:3 என்ற விகிதத்தில் பிரிக்கின்றது.

 

குறிப்பு

மேற்கண்ட எடுத்துக்காட்டில் y இன் ஆயத்தொலைவுகளைச் சமப்படுத்தியும் இதே முடிவைப் பெறலாம். அதை முயன்று பார்க்கவும்.

 

எடுத்துக்காட்டு 5.19

புள்ளிகள் A ( −3,5) மற்றும் B இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P( −2,3) ஆனது 1:6 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கின்றது எனில் B இன் ஆயத் தொலைவுகளைக் காண்க?

 தீர்வு

புள்ளிகள் A( −3,5) மற்றும் B(x2 , y2) என்க.

புள்ளி P( −2,3)ஆனது AB உட்புறமாக 1:6 என்ற விகிதத்தில் பிரிக்கின்றது எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிவுச் சூத்திரத்தின்படி


ஆயத் தொலைவுகளைச் சமப்படுத்த


ஆகவே, புள்ளி B இன் ஆயத்தொலைவுகள் (4, −9) ஆகும்.

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்