Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | வாயுக்களின் இயக்கவியற் கொள்கையிலிருந்து பெறப்பட்ட சில அடிப்படை விதிகள்

11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை

வாயுக்களின் இயக்கவியற் கொள்கையிலிருந்து பெறப்பட்ட சில அடிப்படை விதிகள்

மாறா வெப்பநிலையில், சராசரி இடப்பெயர்வு இயக்க ஆற்றல் ஒரு மாறிலியாகும்.

வாயுக்களின் இயக்கவியற் கொள்கையிலிருந்து பெறப்பட்ட சில அடிப்படை விதிகள்

பாயில் விதி :

சமன்பாடு (9.12) இல் இருந்து நாம் அறிவது PV = 2/3 U.

ஆனால் நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல், அதன் ஒவ்வொரு மூலக்கூறின் சராசரி இயக்க ஆற்றலின் (), N மடங்கிற்குச் சமமாகும்.


மாறா வெப்பநிலையில், சராசரி இடப்பெயர்வு இயக்க ஆற்றல் ஒரு மாறிலியாகும். இதிலிருந்து PV = மாறிலி என அறியலாம்.

எனவே, மாறா வெப்பநிலையில், கொடுக்கப்பட்ட வாயு ஒன்றின் அழுத்தம் அதன் பருமனுக்கு எதிர்த்தகவில் இருக்கும். இதுவே பாயில் விதியாகும்.


சார்லஸ் விதி : 

சமன்பாடு (9.12) இல் இருந்து நாம் அறிவது PV = 2/3U.

ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில், வாயு ஒன்றின் பருமன் அதன் அக ஆற்றலுக்கு நேர்த்தகவில் இருக்கும் அல்லது வாயுவின் சராசரி இயக்க ஆற்றலுக்கு நேர்த்தகவில் இருக்கும். மேலும் வாயுவின் சராசரி இயக்க ஆற்றல் அதன் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும். 

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்


இதுவே சார்லஸ் விதியாகும்.


அவகாட்ரோ விதி: 

இவ்விதியின்படி, மாறா வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சம பருமனுள்ள அனைத்து வாயுக்களும் ஒரே எண்ணிக்கையில் வாயுமூலக்கூறுகளைப் பெற்றிருக்கும். ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு வாயுக்களுக்கு, வாயுக்களின் இயக்கவியற் கொள்கையைப் பயன்படுத்தி சமன்பாடு (9.6) ஐப் பின்வருமாறு எழுதலாம்.


இங்கு என்பவை இரண்டு வெவ்வேறு வாயுக்களின் சராசரி இருமடி வேகங்களாகும். மேலும் N1 மற்றும் N2 என்பவை அவ்விரு வாயுக்களில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையாகும்.

இவ்விரண்டு வாயுக்களிலும் உள்ள வாயு மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல், ஒரே வெப்பநிலையில் சம்மதிப்பைப் பெற்றிருக்கும்.


சமன்பாடு (9.15) ஐ சமன்பாடு (9.16) ஆல் வகுக்கும் போது N1 = N2 எனக் கிடைக்கும்.

இதுவே அவகாட்ரோ விதியாகும். சில நேரங்களில் அவகாட்ரோவின் எடுகோள் அல்லது அவகாட்ரோவின் தத்துவம் எனவும் இது அழைக்கப்படும்.


11வது இயற்பியல் : அலகு 9 : வாயுக்களின் இயக்கவியற் கொள்கை