Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பாடச்சுருக்கம்

இயற்கணிதம் | முதல் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 1 Unit 3 : Algebra

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம்

பாடச்சுருக்கம்

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்

மாறாத எண் மதிப்பைக் கொண்டது மாறிலி. மாறுபடும் பல எண் மதிப்புகளைக் கொண்டது மாறி

கூட்டல், கழித்தல் செயலிகள் மூலம் மாறிகளையும், மாறிலிகளையும் இணைப்பதே இயற்கணிதக் கோவையாகும்

இயற்கணிதக் கோவையின் மூலம் எந்தவொரு கணிதச் சூத்திரம், விதி அல்லது அமைப்பையும் பொதுமைப்படுத்த முடியும்

ஓர் இயற்கணிதக் கோவையில், '+' மற்றும் '-' குறியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள், அதன் உறுப்புகள் எனப்படும்.

இயற்கணிதக் கோவையின் ஓர் உறுப்பின் ஒவ்வொரு காரணிக்கும் அல்லது காரணிக்கூட்டத்திற்கும் கெழு என்பது மீதமுள்ள பிற காரணிகளாகும். ஒரு உறுப்பின் மாறிலியை அதன் எண்கெழு என்பர்

ஒரு கோவையில் மாறுபட்ட எண் கெழுக்களுடன், ஆனால் ஒரே மாறியைக் கொண்ட உறுப்புகளை ஒத்த உறுப்புகள் எனவும், அவ்வாறு இல்லாதவற்றை மாறுபட்ட உறுப்புகள் எனவும் அழைப்பர்

ஒத்த உறுப்புகளை மட்டும் கூட்டவோ, கழிக்கவோ முடியும். மாறுபட்ட உறுப்புகளைக் கூட்டவோ, கழிக்கவோ இயலாது

ஒரு சமன்பாடு என்பது ஒரு மாறிலிக்கோ அல்லது மற்றொரு இயற்கணிதக் கோவைக்கோ சமப்படுத்தப்பட்ட ஓர் இயற்கணிதக் கோவையாகும்

ஒரு சமன்பாட்டைத் தீர்க்க, அதன் இருபுறமும் ஒரே எண்ணைக் கூட்டவோ, கழிக்கவோ, பெருக்கவோ அல்லது வகுக்கவோ செய்யலாம்.


இணையச் செயல்பாடு

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது

 

படி 1

கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜீயோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் "ஏழாம் வகுப்பு - இயற்கணிதம்என்னும் பணித்தாளிற்குச் செல்லவும் "புதிய கணக்குகள்என்பதைச் சொடுக்கி புதிய கேள்விகளைப் பெறுக.


படி


சரியான எண்ணை உள்ளீடு செய்து, உள்நுழை (Enter) பொத்தானை அழுத்தவும். விடை சரியானது எனில், "சிறப்பான பணிஎனத் திரையில் தோன்றும். மேலும் பல கணக்குகளைப் பயிற்சி செய்யவும்.


செயல்பாட்டிற்கான உரலி

இயற்கணிதம் : https://ggbm.at/tb●usqg7

 அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.


7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : இயற்கணிதம்