Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்



கண்டும் கேட்டும் மகிழ்க.

அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய காணொலிகளைக் கண்டும் கேட்டும் மகிழ்க

விடை

மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய காணொலி காட்சிகளைத் தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ளச் செய்தல் வேண்டும்.

 

பேசி வெளிப்படுத்துக.

உங்களை ஓர் அறிவியல் அறிஞராகக் கற்பனை செய்து கொண்டு எவ்வகைக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவீர்கள் என்பது குறித்துப் பேசுக.

விடை

(i) நான் அறிவியல் அறிஞரானால் நாட்டு மக்களுக்குப் பயன்தரும் ஆராய்ச்சிகளைச் செய்வேன்அறிவியல் பிரிவில் விலங்கியலைப் பாடமாக எடுத்துப் படித்து அத்துறையில் ஆராய்ச்சி செய்வேன்.

(ii) முதலில் மக்களின் மனதில் எழும் கோபம்தீயகுணங்கள் அதாவது எதிர்மறையான எண்ணங்கள்பிறரை அழிக்கும் வஞ்சக எண்ணம்இவற்றையெல்லாம் தூண்டும் உட்சுரப்பு நீர்(Harmone) எதுவெனக் கண்டறிந்து அவற்றைச் செயலிழக்கச் செய்வேன்.

(iii) ஏழை முதல் பணக்காரன் வரை இப்போதுள்ள இயந்திர வாழ்க்கையில் பணம் ஒன்றே முதன்மையானது என்ற எண்ணத்தில் உலா வருகிறார்கள்அவரவர் நிலைக்கேற்றபடி அவர்களின் தேவை வேறுபடுகிறது.

(iv) இவர்களின் தேவையை நிறைவேற்ற மனம் போன போக்கில் பல நேர்மையற்ற செயல்களைச் செய்கின்றனர்அவற்றைத் தடுப்பதற்கு என் ஆராய்ச்சி கட்டாயம் பயன்படும்.

(v) இக்கண்டுபிடிப்பால் மாணவர்கள் தங்களின் இளமைப் பருவத்திலிருந்தே பெற்றோரை மதித்தல்ஒழுக்கச் சீலராய் வாழ்தல்தங்கள் மனதை அமைதியான நிலையில் வைத்தல்போட்டிபொறாமை இன்றி வாழ்தல் ஆகிய நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வர்அவர்களால் ஒரு நல்ல சமுதாயமே உருவாகும் என நம்புகிறேன்.

 

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில்ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததுதமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்ததுஅவ்வினா அவரை உறங்க விடவில்லைஇங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார்பிறகு பாதரச ஆவி விளக்குபென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.

ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவுஎன்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்ததுஅவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் " தேசிய அறிவியல் நாள்எனக் கொண்டாடி மகிழ்கிறோம்அவர் யார் தெரியுமாஅவர்தான் சர்சிவிஇராமன்.


1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?

விடை : சர்.சி.விஇராமன்.

 

2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?

கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?

கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?

கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?

கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?

விடை : கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?

 

3. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறதுஏன்?

விடை

பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறதுஏனென்றால் அன்றுதான் இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார் சர்.சி.விஇராமன்.

 

4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.

விடை :

இப்பத்திக்கு நான் கொடுக்கும் தலைப்பு சர்.சி.விஇராமன்.

 

ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக.

1. ஈடுபாடு

2. நுண் பொருள்

3. உற்றவன்

4. பெருங்கடல்

5. துருவப் பகுதி

6. குறிக்கோள்

7. தொழில்நுட்பம்

8. நுண்ணுணர்வு

9. போலியோ

10. மூலக்கூறுகள்

 

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

அறிவியல் ஆக்கங்கள்

விடை

முன்னுரை :

மக்களுக்குப் பயன்படும் பொருள்களுள் மிகவும் இன்றியமையாதவை அறிவியல் சாதனங்கள்அறிவியலின் துணைகொண்டு தங்கள் வாழ்க்கையில் பல்வேறு வசதிகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்உண்ணும் உணவுஉடுத்துகின்ற உடைதொழிலில் அறிவியல் என்று பல வளங்களையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.

அன்றாட வாழ்வில் அறிவியல் :

அறிவியல்’ என்ற ஒற்றை வார்த்தையில்தான் உலகமே அடங்கிவிட்டதுகாலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அன்றாடம் நம் செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நிறைந்துள்ளதுவீட்டில் உபயோகப்படுத்தப்படும் மாவரைக்கும் இயந்திரங்கள்சமையல் செய்யப் பயன்படும் வாயு அடுப்புமின்சார அடுப்புபல வகையான மின் விளக்குகள்குளிரூட்டும் இயந்திரம்குளிர்காலத்தில் வெம்மையைக் கொடுக்கும் ) இயந்திரங்கள்தூசு நீக்கிஈரம் அகற்றிஒட்டடை போக்கி என அடுக்கிக் கொண்டே போகலாம்.

பயன்பாடுகள் :

மாணவர்கள் கல்வி கற்கப் பயன்படுகின்ற நூல்கள் அனைத்தும் அறிவியல் சாதனமான அச்சுப் பொறிகளின் உதவியால் கிடைக்கின்றனதகவல் தொடர்பு சாதனமாகப் பயன்படுகின்ற வானொலிதொலைக்காட்சி ஆகியவை பல வகைகளில் மாணவர்களுக்கும் பயன்படுகின்றனசெல்பேசிதொலைபேசிகணினிமடிக்கணினிமின்னஞ்சல் போன்றவற்றின் பயன்கள் எண்ணிலடங்காதவை.

மருத்துவத்துறை :

நோயறியும் கருவிகளும்வந்த நோயைப் போக்கவும் பல மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளனபுதிய புதிய நோய்கள் உருவாகிக் கொண்டே உள்ளனஅவற்றைப் போக்க பலவிதமான மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளனஉடல் உறுப்பு தானங்கள் பெருகியுள்ளனஉடல் உறுப்புகள் தேவையானவர்களுக்குச் சரியான நேரத்தில் பொருத்தி நோயாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

தொழில்துறை :

தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் இயந்திரங்கள் உருவாக்குவதற்கும் அறிவியல் மிகவும் பயன்படுகிறதுஉற்பத்திப் பொருள்களைப் பெருக்குவதற்கும்நேரத்திற்கு அவற்றை நுகர்வோர்க்கு அனுப்புவதற்கும் பயன்படுகிறதுவேளாண்துறைகளில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.

போக்குவரத்து சாதனங்கள் :

மிதிவண்டிஇரு சக்கர வண்டிமகிழுந்துபேருந்துசரக்குந்து என சாலை வழி வாகனங்களும் நீர் வழிப்பயணத்திற்குப் பயணம் செய்ய கப்பல்களும்வான்வழிப் பயணத்திற்குப் பயணம் செய்ய வானூர்த்திகளும் மிகுந்த அளவில் பயன் தருகின்றனவானில் ஏவப்படுகின்ற ராக்கெட்டுகள்செயற்கைக்கோள்கள் யாவுமே அறிவியலின் கண்டுபிடிப்புகளாகும்.

முடிவுரை :

இயற்கையின் செயல்பாடுகளை அறிந்து ஆராய்ந்து அதில் பொதிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே அறிவியல்அறிவியலின் வியத்தகு சாதனைகளைப் போற்றுவோம்அவற்றை நன்மைக்காவே பயன்படுத்துவோம்.

 

 

மொழியோடு விளையாடு



 

சொல்வளம் பெருக்குக.

பின் வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

விடைகணினி துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.

விடைஅழைப்பு மணி அழுத்தினான் கணியன்

3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர்.

விடைமனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க எந்திரங்களைக் கண்டுபிடித்தனர்

4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

விடைஇன்று பல்வேறு துறைகளிலும் தானியங்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பகிர்க.

ரோபோக்கள் கண்டுபிடிப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க.

விடை:

பூங்குழலி : தேவிதானியங்கி என்று அழைக்கப்படும் ரோபோவைப் பற்றித் தெரியுமா?

தேவி : எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்தானியங்கி என்னும் சொல்லை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் செக் எழுத்தாளரான காரல் கேபெக் என்பவர்தான்அவர் 1920 ஆம் ஆண்டு ஆர்.யு.ஆர்நாடகத்தில் தானியங்கிகளை அறிமுகம் செய்து வைத்தார்நாடகத்தில் ரோபோக்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் மனிதர்களைப் போன்ற தோற்றத்துடனும் தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் விரும்பி பணிபுரியும் எண்ணம் கொண்டவர்களாகவும் வடிவமைத்திருந்தார்.

பூங்குழலி : 1920-இல் தொடங்கிய ரோபோவின் பயணம் 2020-இல் உச்சக் கட்டத்தை எட்டிவிடும் என்றால் மிகையாகாதுநாளுக்கு நாள் இதன் வளர்ச்சி பெருகிக் கொண்டேதான் உள்ளதுமனிதர்கள் செய்ய இயலாத பணியைச் செய்கிறதுவீடுஅலுவலகம்மருத்துவமனைதொழிற்சாலை என்று பல இடங்களிலும் தானியங்கிகள் பணியாற்றுகின்றன.

தேவி : ஆமாம்தொழிற்சாலையில் உதிரிப்பாகங்களை இணைக்கவும்பொருட்களைப்பொட்டலம்செய்வதற்கும்உற்பத்திசெய்தல்பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்வதற்கும் பயன்படுகிறது.

பூங்குழலி : இதையெல்லாம் விட மருத்துவதுறையில் இதன் பங்கு அளப்பிடற் கரியதுநோய்களைக் கண்டறியவும் அறுவை சிகிச்சைகள் செய்யவும் பயன்படுகிறது.

தேவி : நான்கூட செய்தித்தாளில் படித்தேன்இது மனிதர்களைக் காட்டிலும் துல்லியமாகவும் நுட்பகமாகவும் வேலை செய்கிறதுபரவலாக பொருள் உற்பத்திஒருங்கு திரட்டுதல்கட்டி வைத்தல்போக்குவரவுநிலம் அகழ்வது மற்றும் விண்வெளியை ஆய்ந்து அறிதல் அறுவை உபகரணங்கள்ஆயுதங்கள் செய்தல்ஆய்வுக்கூட ஆராய்ச்சி மற்றும் நுகர்வோர் தொழிற்சாலையின் பொருள்கள் செய்தல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

பூங்குழலி : பிப்ரவரி 2018-ல் தென்னிந்தியாவில் மதுரையில் முதன் முறையாக முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

தேவி : இது மட்டுமாநான் செய்தித்தாளில் பார்த்தது நினைவுக்கு வருகிறதுஈரோட்டில் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஇந்த இயந்திரத்தின் மூலம் நுகர்வோர்கள் பணமாகவோகாசோலையாகவோவங்கி வரையோலையாகவோ செலுத்தலாம்.

பூங்குழலி : அப்பப்பாஇந்த தானியங்கியினால் தான் எவ்வளவு புதுமைகள் ஏற்பட்டுள்ளதுகூகுள் பல வருடங்களின் முயற்சியில் விளைந்தது தானியங்கி கார்இதற்கு முதலில் எக்ஸ்லேப் எனப் பெயரிட்டு தற்போது வேமோ’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளதுகண் தெரியாதவர்கள் கூட தனியாக இதில் எளிதாகப் பயணம் செய்ய முடியும்இத்தானியங்கி கார் மூலம் களைப்புகவனச்சிதறல்கள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

தேவி : இத்தானியங்கி கார் விபத்தில் சிக்கியதாக செய்தித்தாளில் பார்த்த நினைவிருக்கிறது.

பூங்குழலி : ஆமாம்நான்கூட படித்திருக்கிறேன்போக்குவரத்துச் சாலைகளில் சோதிப்பதற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளதுவிபத்து நேர்ந்ததால் அதை அப்படியே ஒதுக்க முடியுமாவேறு வகையில் முயற்சி செய்ய வேண்டியது ஆராய்ச்சியாளர்களின் பொறுப்பாகும்.

விபத்தைத் தவிர்க்கும் வகையில் தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரைச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம்நான்கு சக்கரம் கொண்டதாக உள்ளதுபயணம் செய்யும்போது இடையூறுகள் ஏற்பட்டால் கண்டறிய இதில் நுண்ணுணர் (Sensors) பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேவி : இதுமட்டுமல்லஇரயில் பயணிகள் தங்களுடைய செல்லிடப் பேசியில் UTS என்னும் செயலியை நிறுவி தானியங்கி பயணச்சீட்டுகளை பெறலாம்மேலும் நிறுவப்பட்டுள்ள இரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான தங்களது முன்பதிவு அல்லாத பயணச்சீட்டுகளைத் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

பூங்குழலி : தேவி தானியங்கியைப் பற்றி நாம் இவ்வளவு செய்திகளை அறிந்து வைத்துள்ளோம்மேலும் தானியங்கிகளின் செயல்பாடுகள் பற்றி நீ அறிந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்.

 

கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்துக.

1. விகண்லம்

2. மத்ருதும்வ

3. அவிறில்ய

4. ணினிக

5. எலால்ம்

6. அப்ழைபு


 

வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக.


எழுத்துகளை வரிசைப்படுத்தி தமிழக அறிவியல் அறிஞரைக் கண்டுபிடியுங்கள்

விடை : அப்துல்கலாம்.

 

வாக்கியத்தை நீட்டி எழுதுக.

 (.கா.) நான் படிப்பேன். (அறிவியல்பாடம்நன்றாக)

நான் பாடம் படிப்பேன்.

நான் அறிவியல் பாடம் படிப்பேன்.

நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன்.

 

1. அறிந்து கொள்ள விரும்பு. (எதையும்காரணத்துடன்தெளிவாக)

விடை : எதையும் அறிந்து கொள்ள விரும்பு.

எதையும் காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு.

எதையும் காரணத்துடன் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு.

 

2. நான் சென்றேன். (ஊருக்குநேற்று,பேருந்தில்)

விடை : நான் ஊருக்குச் சென்றேன்.

நான் நேற்று ஊருக்குச் சென்றேன்.

நான் பேருந்தில் நேற்று ஊருக்குச் சென்றேன்.

 

அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(.கா.) அறி - அறிகஅறிந்துஅறிஞர்அறிவியல்அறிவிப்பு

1. பார் 2. செய் 3. தெளி 4. படி


 

மெய் எழுத்து நடுவில் அமையுமாறு சொற்களை உருவாக்கு.

(.கா.) கம்பு


விடைகள்

கம்புவம்புநம்புநம்பிகம்பிதம்பி

 

குறுக்கெழுத்துப் புதிர்.


இடமிருந்து வலம்

1. அப்துல்கலாமின் சுயசரிதை

3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி

10. எந்திரமனிதனுக்குக் குடியுரிமை வழங்கிய முதல் நாடு

வலமிருந்து இடம்

2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல்.

6. சதுரங்கப் ----------யில் டீப்புளூ வெற்றி பெற்றது.

8. மருந்து என்னும் பொருள் தரும் சொல்.

மேலிருந்து கீழ்

1. 'ரோபோஎன்னும் சொல்லின் பொருள்

2. அகர வரிசையில் அமையும் இலக்கியம்

7. 'புதுமைகளின் வெற்றியாளர்என்னும் பட்டம் பெற்ற எந்திரமனிதன்.

கீழிருந்து மேல்

4. இந்தியா செலுத்திய ஏவுகணை.

5. தானாகச் செயல்படும் எந்திரம்.

9. அப்துல்கலாம் வகித்த -------- குடியரசுத் தலைவர்.

விடைகள்

இடமிருந்து வலம் :

1. அக்னிச் சிறகுகள்

3. எந்திர மனிதன்

10. சவுதி அரேபியா

மேலிருந்து கீழ் :

1. அடிமை

2. ஆத்திசூடி

7. சோபியா

வலமிருந்து இடம் :

2. ஆய்வு

6. போட்டி

8. ஔடதம்

கீழிருந்து மேல் :

4. அக்னி

5. தானியங்கி

9. பதவி

 

சூழலைக் கையாள்க.

மாலையில் பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறீர்கள்அப்போது பேருந்து பழுதாகிப் பாதி வழியில் நின்றுவிடுகிறதுஇந்தப் பேருந்தை விட்டால் உங்கள் ஊருக்கு வேறு பேருந்து இல்லைஇப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

• அழ ஆரம்பித்து விடுவேன்.

• யாரிடமாவது உதவி கேட்பேன்.

• அருகில் உள்ளவரிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன்.

• ஊருக்கு நடந்தே செல்லத் தொடங்குவேன்.

விடை : அருகில் உள்ளவரிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன்.

 

 

நிற்க அதற்குத் தக ...

 

என் பொறுப்புகள்...

அறிவியல் கருவிகளை நன்மைக்கு மட்டும் பயன்படுத்துவேன்

கலைச் சொல் அறிவோம்.

செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence

மீத்திறன் கணினி - Super Computer

செயற்கைக் கோள் - Satellite

நுண்ணறிவு - Intelligence

 

இணையத்தில் காண்க

பலவகை எந்திர மனிதர்களின் படங்களை இணையத்தில் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.

 

இணையச் செயல்பாடுகள்

Google Handwriting Input எனும் விசைப்பலகையைப் பயன்படுத்துதல்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறும் படம்


செயல்பாட்டிற்கான உரலி

Google Handwriting

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.

inputmethod.hindi&hl=en

தமிழ் 99

https://play.google.com/store/apps/details?id=in.androidtweak.input method.indic&hl=en

செல்லினம்

https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&hl=en

 

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம்