Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆழ்வோம்


கீழ்க்காணும் படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக.

(படம் - 1) 


(எ.கா) கரும்பலகை, வகுப்பறை, பாடப் புத்தகம், மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள். 

படம் - 2


மரம், நடைபாதை, ஊஞ்சல், சருக்கு மரம், செடிகள்.


கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் தொடர்கள் உருவாக்குக. (விதை , கட்டு, படி , நிலவு , நாடு , ஆடு) 

(எ.கா.) விதை -1. விதை நெல் வாங்கினான். 2. சோளம் விதைத்தான்.

கட்டு - 1. கட்டுச்சோறு உண்டான். 2. வீடு கட்டினான். 

படி -1. படிக்கட்டில் அமர்ந்தான். 2. நூலைப் படித்தான். 

நிலவு - 1. நிலவைப் பார்த்தான். 2. கடும் வெப்பம் நிலவுகிறது. 

நாடு - 1. நாட்டை நேசி. 2. நூலகத்தை நாடினான். 

ஆடு -1. ஆடு புல் தின்னும். 2. நாட்டியம் ஆடினாள்.


நிற்க அதற்குத் தக...

என் பொறுப்புகள் ....

1. எந்தச் சூழ்நிலையிலும் இனிய சொற்களையே பேசுவேன்.

2. அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வேன்.

3. என் வாழ்வில் எளிமையைக் கடைப்பிடிப்பேன்.

4. திருக்குறள் கூறும் ஒப்புரவு நெறியைப் பின்பற்றி நடப்பேன்.


கலைச் சொல் அறிவோம்

குறிக்கோள் - Objective ‘

லட்சியம் - Ambition) 

கடமை - Responsibility 

வறுமை - Poverty 

நற்பண்பு - Courtesy

செல்வம் - Wealth

பொதுவுடைமை - Communism

அயலவர் - Neighbour

ஒப்புரவு நெறி - Recipropcity


இணையத்தில் காண்க

அறக்கருத்துகளைக் கூறும் நூல்களின் பெயர்களை இணையத்தில் தேடித் தொகுக்க.


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு