கணக்கு - எல்லைகள் (Limits) | 11th Mathematics : UNIT 9 : Differential Calculus Limits and Continuity

11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY

எல்லைகள் (Limits)

நவீனக் கணிதத்திலும், நுண்கணிதத்திலும் முக்கிய பங்காற்றும் எல்லை பற்றிய கருத்துகளை இந்த அத்தியாயத்தில் விரிவாக காண்போம்.

எல்லைகள் (Limits)


1. எல்லைகளைக் காணுதல் (The calculation of limits)

நவீனக் கணிதத்திலும், நுண்கணிதத்திலும் முக்கிய பங்காற்றும் எல்லை பற்றிய கருத்துகளை இந்த அத்தியாயத்தில் விரிவாக காண்போம். கணிதவியல் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றாலும், 19−ம் நூற்றாண்டில் பிரெஞ்சுக் கணித மேதை அகஸ்டின்லூயிஸ் கோஷி மற்றும் கார்ல் வொயர்ஸ்ட்ராஸ் ஆகியோர் குறிப்பிடும் வரை எல்லை பற்றி அறிந்திருக்கவில்லை. இப்பகுதியில் எல்லையின் வரையறை மற்றும் அவற்றை எவ்வாறு காண்பது என்பதைப் பற்றியும் பார்ப்போம்

விளக்க எடுத்துக்காட்டு 9.1

f : என்ற சார்பு y = f (x ) = x2 + 3 என வரையறுப்பதாக எடுத்துக் கொள்வோம்

x = 2 என்ற புள்ளியில் இந்தச் சார்பின் தன்மை பற்றி ஆராய்வோம். இருவிதமான xன் மதிப்புகளைப் பயன்படுத்துவோம் : ஒன்று 2−ன் இடப்பக்கமிருந்து (2−க்கு குறைவானது) 2− நோக்கி நெருங்கும் மதிப்புகள் ; மற்றொன்று 2−ன் வலப்பக்கமிருந்து 2− நோக்கி நெருங்கும் மதிப்புகள் (2க்கு அதிகமான).


அட்டவணையிலிருந்து xன் மதிப்பு 2− நோக்கி நெருங்கும்போது f(x) = x2 + 3−ன் மதிப்பு 7− நெருங்குவதைக் காணலாம். இதில் வியக்கத்தக்கது ஒன்றுமில்லை, ஏனெனில் x = 2−ல் f(x)−ன் மதிப்பை கணக்கிடும்போது f(2) = 22 + 3 = 7 எனக்கிடைப்பதைக் காணலாம்.

இந்த எல்லை மதிப்பை யூகிப்பதற்கு x = 2−ல் f(x)ன்மதிப்பைக் கணக்கிட வேண்டிய அவசியமில்லை

xன் மதிப்பு 2−க்கு இடமிருந்தும் (2− விட குறைவான மதிப்புகள்) வலமிருந்தும் (2− விட அதிக மதிப்புகள்) 2− நெருங்கும்போது f(x)ன் மதிப்பு 7− நெருங்குகிறது. அதாவது xன் மதிப்பு 2−க்கு மிக நெருக்கமாக அமையும்போது f(x)ன் மதிப்பு 7−க்கு மிக அருகில் அமைகிறது. இந்தச் சூழலை சுருக்கமாக பின்வருமாறு கூறலாம்.

xன் மதிப்பு 2− இடப்பக்கமாக நெருங்கும்போது f(x)ன் இடது எல்லை 7−ஆகவும், அதேபோல் xன் மதிப்பு 2− வலப்பக்கமாக நெருங்கும்போது f(x)ன் வலது எல்லை 7−ஆகவும் உள்ளது என்று பொருள். இதனைப் பின்வருமாறு எழுதலாம் :


என்பது தனித்த ஒரு மெய்யெண் என்பதையும் குறிக்கும்.

x → 2 எனும்போது f(x) = x2 + 3−ன் தன்மையை, படம் 9.1 வடிவியல் முறையில் விளக்குகிறது.


விளக்க எடுத்துக்காட்டு 9.2

அடுத்ததாக f(x) =  என்ற விகிதமுறு சார்பை எடுத்துக்கொள்வோம்.

இந்தச் சார்பின் மதிப்பகம் \ {− 4} ஆகும். f(−4) வரையறுக்கப்படவில்லை. எனினும், xன்  மதிப்பு − 4 நெருங்கும்போது உள்ள f(x)ன் மதிப்பைக் கணக்கிட இயலும், ஏனெனில், என்ற குறியீட்டின்படி நாம் xக்கு – 4 அருகில் உள்ள மதிப்புகளை மட்டுமே கருத்தில் கொள்கிறோம். x = −4 அல்ல என்பதை இது குறிக்கின்றது. பின்வரும் அட்டவணை xன் மதிப்பு − 4 நெருங்கும்போது உள்ள f(x)ன் மதிப்புகளைத் தருகிறது,


x ≠ − 4 எனில், f(x) நீக்கல் முறையில் சுருக்கலாம் :

f(x) = (16 − x2) /(4+x) = (4 + x)(4 − x) / (4 + x) = 4  − x.


படம் 9.2 லிருந்து, f(x)ன் வரைபடமானது x = −4 என்ற புள்ளியைத் தவிர மற்ற இடங்களில் y = 4 − x என்ற கோட்டின் வரைபடம் அமைந்துள்ளதைக் காணலாம். x = −4 என்ற புள்ளி சிறு துவாரமாகத் (puncture) தொடர்ச்சியற்றுக் காட்டப்பட்டுள்ளது. xன் மதிப்பு −4− நெருங்க, நெருங்க y−ன் மதிப்பு 8− நெருங்கி, நெருங்கி செல்வதைக் காணலாம். இவை படத்தில் xஅச்சின் மீதுள்ள அம்புக்குறிகளையும், y−அச்சின் மீதுள்ள அம்புக்குறிகளையும் குறிக்கின்றன.

இங்கு


விளக்க எடுத்துக்காட்டு 9.2−ல் x = −4இல் f(x) வரையறுக்கப்படவில்லை எனினும் xன் மதிப்பு − 4 நெருங்கும்போது f(x)ன் மதிப்பு ஒரு எல்லையை நெருங்குவதைக் காணலாம். x = −4−ல் சார்பு f(x)ன் மதிப்பு இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் அது xன் மதிப்பு −4 − நெருங்கும்போது f(x)ன் எல்லை மதிப்பு இருத்தலைப் பாதிக்கவில்லை என்பதை உணரலாம்.


விளக்க எடுத்துக்காட்டு 9.3

தற்போது நாம் விளக்க எடுத்துக்காட்டுகள் 9.1 மற்றும் 9.2−லிருந்து வேறுபட்ட ஒரு சார்பை எடுத்துக் கொள்வோம்.


x = 0 என்ற மதிப்பு f(x) என்ற சார்பின் சார்பகமான \{0}−ல் இல்லை. வரைபடத்தைக் கவனிக்கவும். வரைபடத்தில் இருந்து xன் மிகை மதிப்புகளுக்கு,

எனவும் உள்ளதைக் காணலாம்.

xன் மதிப்பு பூஜ்ஜியத்திற்கு எவ்வளவு மிக அருகில் இருந்தாலும் (பூஜ்ஜியத்தின் அண்மையில்), xன் மிகை மற்றும் குறை மதிப்புகளுக்கு முறையே  f(x) = 1 மற்றும்  f(x) = − 1 எனுமாறு இருக்கும் என அறியலாம்.


இதிலிருந்து x = 0 −ல் எல்லை மதிப்பு இல்லை என அறியலாம். ஆனால்,xன் மற்ற மதிப்புகளுக்கு எல்லை மதிப்புகள் உண்டு.

அதாவது x0 ≠ 0 என உள்ள எல்லா மெய்யெண்களுக்கும்,


இப்போது 9.1 முதல் 9.3 வரையிலான விளக்க எடுத்துக்காட்டுகளின் வேறுபாடுகளைக் காண்போம். விளக்க எடுத்துக்காட்டு 9.1−ல் f(x) = x2 + 3 என்ற சார்பு x = 2−ல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது 2 என்ற எண் = (– ∞, ∞) என்ற சார்பகத்தில் உள்ளது. விளக்க எடுத்துக்காட்டு 9.2−ல்  x = −4 என்ற புள்ளியில் சார்பு வரையறுக்கப்படவில்லை. முதலில் கூறப்பட்ட எடுத்துக்காட்டில் xன் மதிப்பு 2− நெருங்க நெருங்க கிடைக்கக் கூடியதாக அதாவது கிடைக்கப்பெற்று அவை சமமாகவும் ஒரு தனித்த மெய்யெண்ணாகவும் உள்ளன.

இரண்டாவது எடுத்துக்காட்டில் x = −4−ல் சார்பு வரையறுக்கப்படாவிடினும் xன் மதிப்பு − 4− நெருங்க நெருங்க கிடைக்கிறது.

விளக்க எடுத்துக்காட்டு 9.3−ல் ன் மதிப்பு கிடைக்கப்பெறவில்லை என்பதன் பொருள், xன் மதிப்பு பூஜ்ஜியத்திற்கு மிக அருகில் உள்ளபோது ஒரு பக்க எல்லைகளான மற்றும் ன் மதிப்புகள் வெவ்வாறாக உள்ளன என்பதாகும்.

மேற்கண்ட உற்று நோக்கல்களிலிருந்து எல்லைக்கான வரையறையை உய்த்தறியும் முறையில் பெறலாம்.

வரையறை 9.1

I என்பது x0 என்ற புள்ளியை உள்ளடக்கிய ஒரு திறந்த இடைவெளி என்க. சார்பு f : 1 → . என வரையறுக்கப்பட்டுள்ளது. xன் மதிப்பு x0 நெருங்கும்போது f(x)ன் எல்லை மதிப்பு L (அதாவது குறியீட்டில் எனக் கூற வேண்டுமானால், xx0 ஆக அமைந்து xஆனது தேவையான அளவுக்கு x0 இருபுறமுமாக நெருங்கும்போது f(x)ன் மதிப்பானது தேவையான அளவுக்கு L−க்கு மிக அருகில் அமைய வேண்டும்.

மேற்கூறிய விவரங்களை பின்வரும் வரைபடங்கள் (9.4 மற்றும் 9.5) மூலம் காணலாம்.




2. ஒருபுற எல்லைகள் (One sided limits)


வரையறை 9.2

xன் மதிப்பு தேவையான அளவு x0க்கு அருகிலும் x0 விடக் குறைவாகவும் இருக்கும்போது f(x)ன் மதிப்பு l1, க்கு மிக அருகில் இருக்கும் எனில், xன் மதிப்பு x0 நெருங்கும்போது f(x)ன் இடப்பக்க எல்லை (x இடப்பக்கமிருந்து x0 நெருங்கும்போது f(x)ன் எல்லை) எனக் கூறலாம்.

இதேபோன்று


வரையறை 9.3

xன் மதிப்பு தேவையான அளவு x0க்கு அருகிலும் x0 விட அதிகமாகவும் இருக்கும்போது f(x)ன் மதிப்பு l2க்கு மிக அருகில் இருக்கும் எனில், xன் மதிப்பு x0 நெருங்கும்போது f(x)ன் வலப்பக்க எல்லை (x வலப்பக்கமிருந்து x0 நெருங்கும்போது f(x)ன் எல்லை) எனக்கூறலாம்

மேலும் x < x0 மற்றும் x > x0 என்பவை முறையேxx0மற்றும் எனக்xx0+ ”  குறிக்கப்படுகிறது.

இந்த வரையறைகள் 9.6 முதல் 9.9 வரையிலான படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.


xன் மதிப்பு x0 நெருங்கும்போது f(x)ன் எல்லை மற்றும் ஒருபுற எல்லைகளின் வரையறைகளிலிருந்து பின்வருவனவற்றை பெறலாம்.


இவ்வாறாக, கிடைக்கப்பெறும் எனில் L ஒரு தனித்த மெய்யெண்ணாகும். மேற்கண்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்யவில்லை எனில் xன் மதிப்பு x0 நெருங்கும்போது f(x)க்கு எல்லை மதிப்பு இல்லை எனலாம்.

ஒருபுற எல்லைகள், எல்லைகளைவிட வலுக்குறைந்தவையாகும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும். ஒருபுற எல்லைகளைக் காண கீழ்க்காண்பவை பயனுள்ளதாக இருக்கும்.

h > 0 எனில்,


குறிப்பாக f(x0) மற்றும் f(x0+) ஆகியவை முறையே இடப்புற மற்றும் வலப்புற எல்லைகளைக் குறிக்கும்போது f(x0) என்பது x = x0 என்ற புள்ளியில் சார்பின் மதிப்பாகும்.


எடுத்துக்காட்டு 9.1


11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY