Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | கோண சீரிசையியக்கத்தின் அலைவு நேரம் மற்றும் அதிர்வெண்

11வது இயற்பியல் : அலகு 10 : அலைவுகள்

கோண சீரிசையியக்கத்தின் அலைவு நேரம் மற்றும் அதிர்வெண்

கொடுக்கப்பட்ட அச்சைப்பற்றி தனித்து சுழலும் பொருளின் அலைவுகள், கோண அலைவுகள் எனப்படும்.

கோண சீரிசையியக்கத்தின் அலைவு நேரம் மற்றும் அதிர்வெண்

கொடுக்கப்பட்ட அச்சைப்பற்றி தனித்து சுழலும் பொருளின் அலைவுகள், கோண அலைவுகள் எனப்படும்.


எந்த ஒரு புள்ளியில் பொருளின் மீது செயல்படும் தொகுபயன் திருப்புவிசை சுழியாகின்றதோ அப்புள்ளி சமநிலைப்புள்ளி எனப்படும்.

பொருள் சமநிலைப்புள்ளியிலிருந்து இடபெயர்ச்சிக்குள்ளாகும் போது, செயல்படும் பயனுறு தொகுபயன் திருப்புவிசை கோண இடப்பெயர்ச்சிக்கு நேர்தகவில் இருக்கும் மற்றும் இத் திருப்பு விசையானது அப்பொருளை சமநிலைக்கு கொண்டு வர முயற்சிக்கும். (திருப்பு விசை அலகு 5 இல் விளக்கப்பட்டுள்ளது.)

பொருளின் கோண இடபெயர்ச்சிஎனவும் பொருளின் மீது செயல்படும் தொகுபயன் திருப்பு விசை எனவும் கொண்டால்,


κ  என்பது மீள்திருப்புவிசை மாறிலி இது ஓரலகு கோண இடப்பெயர்ச்சிக்கான திருப்பு விசையாகும். I என்பது ஒரு பொருளின் நிலைமத்திருப்புத்திறன் மற்றும்  என்பது கோண முடுக்கம் எனில்


இச்சமன்பாடு தனிச்சீரிசை வகைக்கெழுச் சமன்பாடு போல் உள்ளது. ஆகையால் சமன்பாடு (10.17) தனிச்சீரிசை இயக்கச் சமன்பாடு (10.10) உடன் ஒப்பிட நாம் பெறுவது


கோணச்சீரிசை இயக்கத்தின் (சமன்பாடு 10.13 - லிருந்து)


அலைவு நேரம் (சமன்பாடு 10.12 - லிருந்து)

11வது இயற்பியல் : அலகு 10 : அலைவுகள்