Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | உடலப் புற அமைப்பியல் : முக்கியமான கேள்விகள்

தாவரவியல் - உடலப் புற அமைப்பியல் : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

உடலப் புற அமைப்பியல் : முக்கியமான கேள்விகள்

மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள், கேள்விக்கு பதிலளிக்கவும்
தாவரப்புற அமைப்பியல் மற்றும் மூடுவிதைத்தாவரங்களின் வகைப்பாடு

உடலப் புற அமைப்பியல்

மதிப்பீடு


1. கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?

(அ) மாஞ்சிஃபெரா

(ஆ) பாம்புசா

(இ) மியூசா

(ஈ) அகேவ்

 

2. வேர்கள் என்பவை

(அ) கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

(ஆ) கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர் ஒளி நாட்டமுடையவை

(இ) மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர் ஒளி நாட்டமுடையவை

(ஈ) மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

 

3. பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா – எதற்கு எடுத்துக்காட்டு.

(அ) இலை மொட்டு, நுனி மொட்டு

(ஆ) இலைமொட்டு, தண்டு மொட்டு

(இ) தண்டு மொட்டு, நுனி மொட்டு

(ஈ) தண்டு மொட்டு, இலை மொட்டு

 

4. கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?

(அ) பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன.

(ஆ) அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.

இ) நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.

(ஈ) ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

 

5. தவறான இணையைத் தேர்ந்தெடு

(அ) மியூஸா – ஓர் நடு நரம்பு

(ஆ) லாப்லாப் – முச்சிற்றிலைஅங்கைக்கூட்டிலை

(இ) அகாலிஃபா – இலை மொசைக்

(ஈ) அலமாண்டா – மூவிலை அமைவு

 

6. வேரின் பகுதிகளைப் படம் வரைந்து பாகம் குறி?

7. கீழ்கண்டவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக.

(அ) அவிசென்னியா, ட்ராபா

(ஆ) வேர் மொட்டுக்கள், இலை மொட்டுக்கள்

(இ) இலைத்தொழில் தண்டு,

(ஈ) குறு இலைத்தொழில் தண்டு

8. வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன.

9. வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.

10. ஓர் நடு நரம்பமைவுக்கும், பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் கூறு.

 


11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்