Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவர உலகம் | தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவரவியல் : தாவர உலகம் - முன்பதிவு மற்றும் முக்கியமான கேள்வி பதில் - சுருக்கமான கேள்விகள் பதில்கள், குறுகிய கேள்விகளுக்கான பதில்கள்

உலகின் பன்முகத்தன்மை

தாவர உலகம் (11 வது தாவரவியல் : அலகு 2)

 

5. ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலை இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலிலிருந்து வேறுபடுத்துக.

 

ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலி

1. கேமீட்டோபைட் நிலை – ஓங்கியது ஒளிச்சேர்க்கைத் திறனுடையது சார்பின்றி வாழக்கூடியது

2. ஸ்போரோ - பைட்(அ) (வித்தக தாவர நிலை)

  * ஒடுங்கியது

  * சைகோட்டை மட்டும் குறிப்பிடுகிறது.

  * சைகோட்- குன்றல் பகுப்படைந்து ஒற்றைமய நிலையைத் தக்க வைத்துக் கொள்கிறது.

3. எ.கா - வால்வாக்ஸ்.ஸ்பைரோகைரா 

இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலி

1. ஓங்கியது

   * ஒடுங்கியது - ஒரு செல் (அ) சில செல்களால் ஆன நிலை

ஸ்போரோ - ஒடுங்கியது

2. சைகோட் - பிரிந்து ஓங்கிய ஸ்போரோபைட் (வித்தக தாவரமாக

வளர்கிறது)

3. எ.கா. பியூகஸ்ஜிம்னோஸ்பெர்ம் ஆஞ்சியோஸ்பெர்ம்

 

6. ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்னஓர் எ.கா. தருக.

 புரோட்டோஸ்டீலின் துணைப்பிரிவு –

 இதில் சைலம் புளோயத்தால் சூழப்பட்டுள்ளது.

 இதில் சைலம்ஃபுளோயம்தட்டுகள் போன்று மாறிமாறி அமைந்திருக்கும்.

எ.கா - லைக்கோபோடியம் செர்ரேட்டம்.

 

7. 'பிக்னோசைலிக்பற்றி நீவிர் அறிவது யாது?

• இது ஜிம்னோஸ்பெர்ம் தாவரமான பைனஸில் காணப்படுகிறது

• இரண்டாம் வளர்ச்சி ஆஞ்சியோஸ்பெர்ம் போல் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களிலும் காணப்படுகிறது.

இதில் (சைலம்) கட்டைகள் - அடர்த்தியாகவும் குறுகிய மெடுல்லரி கதிர்கள் கொண்டும் காணப்படுகிறது. இந்த சைலம் பிக்னோசைலிக் என்று பெயர். எ.கா-பைனஸ். இது சைலத்தில் காணப்படும் மானோசைலிக் தன்மையிருந்து வேறுபட்டது.

 

8. ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்குமிடையே காணப்படும் இரண்டு பொதுப் பண்புகளைத் தருக.

ஜிம்னோஸ்பெர்ம்கள்

1. விதை உடைய தாவரங்கள் தலைமுறை மாற்றம் காணப்படுகிறது.

2. தாவர உடலம் வித்தகத் தாவர நிலையில் உள்ளது - இது ஓங்கியது.

3. தண்டில் இரண்டாம் வளர்ச்சி காணப்படுகிறது. 

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

1. விதை உடைய தாவரங்கள் தலைமுறை மாற்றம் காணப்படுகிறது.

2. தாவரம் உடலம் வித்தகத் தாவர நிலையில் உள்ளது - இது ஓங்கியது.

3. இரண்டாம் வளர்ச்சி - இருவித்திலைத் தாவரத்தண்டில் மட்டும் காணப்படுகிறது. ஒரு வித்திலைத் தாவரத்தண்டில் காணப்படவில்லை.

 

9. பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயாஉனது விடையை நியாயப்படுத்துக.

குளோரோபைசி - பிரிவிலுள்ள ஆல்காக்களின் பசுங்கணிகத்தின் வடிவத்தில் மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது.

கோப்பைவடிவம் - கிளாமிடோமோனஸ்

வட்டுவடிவம் - கேரா

கச்சை வடிவம் - யூலோத்ரிக்ஸ்

வலைப்பின்னல் - டோகோனியம்

சுருள்வடிவம் - ஸ்பைரோகைரா

நட்சத்திர வடிவம் - சைக்னிமா

தட்டுவடிவம் – மவுஜிலியா

 

10. பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயாஉனது விடையை நியாயப்படுத்துக.

பிரையோஃபைட்கள் ஈரமானநிழலான இடங்களில் வளரக்கூடிய எளிய நில வாழ் தாவரங்களாகும். இருப்பினும் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்யநீர் இனப்பெருக்கத்திற்கு அவசியமாதலால் தாவரப் பெரும் பிரிவின் நீர் நில வாழ்வன (Amphibians) என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

ஆண்கேமிட்டுகள் ஆர்க்கிகோனியத்தை அடைய நீர் அவசியமாகிறது. பிளாஜெல்லாக்களை உடைய ஆந்ரோஸீவாய்டுகள் மிக மெல்லிய நீர் படலத்தில் நீந்தி ஆர்க்கிகோனியத்தை அடைந்து முட்டையுடன் இணைந்து சைகோட்டையும் பின்னர் ஸ்போரோஃபைட் சந்ததியையும் உருவாக்குகிறது.

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்