Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | திரவங்களின் கன அளவை அளவிடல்

அறிவியல் ஆய்வக சோதனைகள் - திரவங்களின் கன அளவை அளவிடல் | 9th Science : Practical experiments

9 ஆம் வகுப்பு அறிவியல் : வேதியியல் : செய்முறை

திரவங்களின் கன அளவை அளவிடல்

நோக்கம்: கொடுக்கப்பட்டுள்ள நிறமற்ற மற்றும் நிறமுள்ள திரவங்களின் கனஅளவை அளவிடல்

வேதியியல்

 

4. திரவங்களின் கன அளவை அளவிடல்

 

நோக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள நிறமற்ற மற்றும் நிறமுள்ள திரவங்களின் கனஅளவை அளவிடல்


தேவையான பொருட்கள்:

பிப்பெட்(20 மி.லி), மாதிரித் திரவங்கள், மற்றும் பீக்கர்


செய்முறை:

ஒரு 20 மி.லி கனஅளவுள்ள பிப்பெட்டை எடுத்து முதலில் நீரினால் நன்றாக கழுவிய பின்பு, அளக்க வேண்டிய மாதிரித் திரவத்தைக் கொண்டு அலசியபின், பிப்பெட்டின் கீழ்ப்பகுதி மாதிரித்திரவத்தின் உள்ளே நன்றாக மூழ்கி இருக்கும்படி வைத்து, அலசவும்.

பிப்பெட்டின் அளவுக் குறியீட்டுக்கு மேல் திரவம் வரும்வரை உறிஞ்சி, ஆள்காட்டி விரலினால் மேல் பகுதியை அழுத்தி மூடவும், பிப்பெட்டை திரவத்தில் இருந்து வெளியே எடுத்து,

அதன் அளவுக்கோடு கண்பார்வை மட்டத்துக்கு நேராக இருக்கும்படி பிடித்துக்கொண்டு, ஆள்காட்டி விரலின் அழுத்தத்தைக் குறைத்து, திரவத்தின் கீழ் பிறை தளம் பிப்பெட்டின் அளவுக்கோட்டைத் தொடும்வரை திரவத்தை வெளியேற்றவும்.

இப்பொழுது பிப்பெட்டில் இருக்கும் திரவம் மிகச் சரியாக 20 மி.லி ஆகும். பிப்பெட்டை, பீக்கர் உள்ளே வைத்து ஆள்காட்டி விரலின் அழுத்தத்தை நீக்குவதன் மூலம் திரவம் முழுவதையும் சேகரிக்கலாம்.


அட்டவணை :



முடிவு:

மிகச் சரியாக 20 மி.லி கனஅளவு கொண்ட கொடுக்கப்பட்ட வெவ்வேறு திரவங்கள் 20 மி.லி படித்தர பிப்பெட் மூலம் அளவிடப்பட்டன.


குறிப்பு:

1. பிப்பெட்டின் அளவுக்கோடு கண்பார்வைக்கு மேலாகவோ, கீழாகவோ இருந்தால் கனஅளவு மாறுபடும்.

2. நிறமுள்ள திரவங்களை அளக்கும்போது மேல் பிறைதளம் பிப்பெட்டின் அளவுகோட்டைத் தொடுமாறு அளக்க வேண்டும்.

3. வலிமை மிக்க அமிலம் மற்றும் காரங்களை ஒருபோதும் பிப்பெட்டில் உறிஞ்சக் கூடாது.

9 ஆம் வகுப்பு அறிவியல் : வேதியியல் : செய்முறை