Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | வெர்னியர் அளவி-ஒரு கோள வடிவப் பொருளின் விட்டத்தைக் கணக்கிடுதல்

அறிவியல் ஆய்வக சோதனைகள் - வெர்னியர் அளவி-ஒரு கோள வடிவப் பொருளின் விட்டத்தைக் கணக்கிடுதல் | 9th Science : Practical experiments

9 ஆம் வகுப்பு அறிவியல் : இயற்பியல் : செய்முறை

வெர்னியர் அளவி-ஒரு கோள வடிவப் பொருளின் விட்டத்தைக் கணக்கிடுதல்

நோக்கம்: வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி கோள வடிவப் பொருளின் விட்டம் காணல்.

செய்முறை

இயற்பியல்


 

1. வெர்னியர் அளவி-ஒரு கோள வடிவப் பொருளின் விட்டத்தைக் கணக்கிடுதல்

 

நோக்கம்:

வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி கோள வடிவப் பொருளின் விட்டம் காணல்.

 

தேவையான பொருள்கள்:

வெர்னியர் அளவி, கோள வடிவப் பொருள் (கிரிக்கெட் பந்து)

 

சூத்திரம்:

i) மீச்சிற்றளவு (LC) = 1 முதன்மைக்கோல் பிரிவு - 1 வெர்னியர் கோல் பிரிவு

= 1 மிமீ - 0.9 மி.மீ

LC = 0.1 மி.மீ () 0.01 செ.மீ

ii) கோள வடிவப் பொருளின் விட்டம் (d) = M.S.R+ (V.C × LC) ± ZC. செ.மீ

MSR - முதன்மைக் கோல் அளவு

VC - வெர்னியர் கோல் ஒன்றிப்பு

LC - மீச்சிற்றளவு (0.01 செ.மீ)

ZC - சுழித் திருத்தம்.

 

செய்முறை:

வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவைக் கண்டறிதல்.

வெர்னியர் அளவியின் சுழித்திருத்தம் கண்டறிதல்.

கொடுக்கப்பட்டப் பொருளினை இரு கீழ்த்தாடைகளுக்கு இடையே உறுதியாகப் பற்றியிருக்கும்படி வைக்கவும்.

முதன்மைக்கோல் அளவினையும், வெர்னியர் ஒன்றிப்பு அளவினையும் குறிக்கவும்.

பொருளினை வெவ்வேறு பகுதிகளில் வைத்து சோதனையை மீண்டும் செய்து அளவினைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்துக.

சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கீடு செய்து கோளவடிவப் பொருளின் விட்டத்தைக் கணக்கிடவும்.

d = M.S.R + (V.C × LC) ± ZC. செ.மீ

மீச்சிற்றளவு (LC) = 0.01 செ.மீ

சுழித்திருத்தம் (ZC): -----------


முடிவு:

கொடுக்கப்பட்ட கோள வடிவப் பொருளின் விட்டம் 7.26 செ.மீ (கிரிக்கெட் பந்து)

9 ஆம் வகுப்பு அறிவியல் : இயற்பியல் : செய்முறை