Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | திருகு அளவி ஒரு இரும்பு ஆணியின் தடிமனைக் கணக்கிடுதல்

அறிவியல் ஆய்வக சோதனைகள் - திருகு அளவி ஒரு இரும்பு ஆணியின் தடிமனைக் கணக்கிடுதல் | 9th Science : Practical experiments

9 ஆம் வகுப்பு அறிவியல் : இயற்பியல் : செய்முறை

திருகு அளவி ஒரு இரும்பு ஆணியின் தடிமனைக் கணக்கிடுதல்

நோக்கம்: கொடுக்கப்பட்ட ஒரு இரும்பு ஆணியின் தடிமனைக் காணல்.

2. திருகு அளவி ஒரு இரும்பு ஆணியின் தடிமனைக் கணக்கிடுதல்.

 

நோக்கம்:

கொடுக்கப்பட்ட ஒரு இரும்பு ஆணியின் தடிமனைக் காணல்.

 

தேவையான பொருள்கள்:

திருகு அளவி மற்றும் இரும்பு ஆணி.

 

சூத்திரம்:

i) மீச்சிற்றளவு (LC) = புரியிடைத்தூரம் / தலைக்கோலின் மொத்தப்பிரிவுகளின் எண்ணிக்கை

ii) தடிமன் (t) = புரிக்கோல் அளவு(P.S.R) + (தலைக்கோல் ஒன்றிப்பு(HSC)

 × மீச்சிற்றளவு(L.C)) ± சுழித்திருத்தம்

t = P.S.R + (H.S.C × LC) ± Z.C


பிழை:

i) நேர்ப்பிழை : நேர்ப்பிழை 5 புள்ளிகள் எனில், சுழித் திருத்தம் 5 புள்ளிகள் கழிக்க வேண்டும்.

t = PSR + (HSC × LC) - ZC

t = PSR + (HSC × LC) - 5

ii) எதிர்ப்பிழை : எதிர்ப்பிழை 95 புள்ளிகள் (100 - 95 = 5 புள்ளிகள்) எனில், சுழித் திருத்தம் 5 புள்ளிகள் கூட்ட வேண்டும்.

t = PSR + (HSC × LC) + ZC

t = PSR + (HSC × LC) + 5

iii) சுழிப்பிழை : எந்தவித சுழித்திருத்தமும் இல்லையெனில் t = PSR + (HSC× 0.01) + 0


செய்முறை:

திருகு அளவியின் மீச்சிற்றளவு (LC) = 0.01 மி.மீ ஆகும்.

திருகு அளவியின் இரு முகங்கள் S1, S2 இணைந்திருக்கும் பொழுது மேற்கண்ட முறையில் சுழிப்பிழை மற்றும் சுழித்திருத்தம் காண வேண்டும்

திருகு அளவியின் இரு முகங்களுக்கிடையே இரும்பு ஆணியை வைத்து, புரிக்கோல் அளவையும், புரிக்கோல் அச்சோடு (P.S.R) பொருந்தும் தலைக்கோல் ஒன்றிப்பையும் (H.S.C) காண வேண்டும்

இரும்பு ஆணியின் தடிமன் t = P.S.R + (H.S.C × LC) + ZC

இதைப்போல, இரும்பு ஆணியின் வெவ்வேறு பகுதிகளை திருகு அளவியில் பொருத்தி, சோதனையைத் திரும்பவும் செய்யவும். அளவீடுகளை கீழ்க்கண்ட அட்டவணையில் நிரப்புக.

சுழித்திருத்தம்: (ZC) இல்லை .

மீச்சிற்றளவு: 0.01மி.மீ



முடிவு: கொடுக்கப்பட்ட இரும்பு ஆணியின் தடிமன்= 4.63.மி.மீ

9 ஆம் வகுப்பு அறிவியல் : இயற்பியல் : செய்முறை