Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி: கேள்விகள் மற்றும் பதில்கள்

குணங்குடி மஸ்தான் சாகிபு | இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி: கேள்விகள் மற்றும் பதில்கள் - குணங்குடி மஸ்தான் சாகிபு : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மனிதர்கள் தம் ------------- தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

அ) ஐந்திணைகளை

ஆ) அறுசுவைகளை

இ) நாற்றிசைகளை

ஈ) ஐம்பொறிகளை

[விடை : ஈ) ஐம்பொறிகளை]

 

2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் --------------

அ) பகர்ந்தனர்

ஆ) நுகர்ந்தனர்

இ) சிறந்தனர்.

ஈ) துறந்தனர்

[விடை : அ) பகர்ந்தனர்]

 

3. 'ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஆனந்த + வெள்ளம்

ஆ) ஆனந்தன் + வெள்ளம்

இ) அனந்தம் + வெள்ளம்

ஈ) ஆனந்தர் + வெள்ளம்

[விடை : இ) அனந்தம் + வெள்ளம்]

 

4. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..

அ) உள்ளேயிருக்கும்

ஆ) உள்ளிருக்கும்

இ) உளிருக்கும்

ஈ) உளருக்கும்

[விடை : ஆ) உள்ளிருக்கும்]

 

குறுவினா

1. உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?

விடை

உண்மை அறிவனை உணர்ந்தோர் உள்ளத்தில் இறைவன் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றான்.

 

2. மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?

விடை

இறைவனின் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல், பணத்தின் மீது ஆசை வைப்பது மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைகிறது.

 

சிறுவினா

குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

விடை

குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன :

(i) “மேலான பொருளே! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே! உன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல் பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.

(ii) நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய்.

(iii) மேலான பொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரிய செயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள் செய்வாயாக!என்று குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுகிறார்.

 

சிந்தனை வினா

ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்யவேண்டிய நற்செயல்கள் யாவை?

விடை

ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் :

(i) தன்னிலும் தகுதி முதலானவற்றில் குறைந்தவர்கள் என்றாலும் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

(ii) இன்சொல் மட்டுமே பேசி மகிழ வேண்டும்.

(iii) பிறருக்கு உண்டாகும் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணி, இரக்கப்பட்டு, தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும்.

(iv) நம் உடல் உழைப்பால் பிறருக்கு உதவ வேண்டும்.

(v) ஒருவரது நாக்கு பிறரைத் தூற்றவும், போற்றவும் செய்யும். நாவினால் சுட்ட வடு ஆறாது என்பதால், பிறர் மனம் புண்படாதபடி பேசுவதே பெரிய நற்பண்பாகும்.

(vi) நமது கண்கள் நல்ல நூல்களைப் படிக்கவும், நல்ல காட்சிகளை (திரைப்படம், தொலைக்காட்சி காணவும் செய்ய வேண்டும். மனதிற்கு தீங்கு விளைவிக்கும் காட்சிகளை, நூல்களை பார்க்க, படிக்கக் கூடாது.

(vii) கோபமின்றி வாழ்தல் போன்றவை நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் ஆகும்.

 


கற்பவை கற்றபின்

 

 

கண்ணி வகையில் பாடப்பட்ட வேறு பாடல்களைத் தொகுத்து எழுதுக.

விடை

(i) தாயுமானவர் பாடல் பராபரக் கண்ணி :

முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே

சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே!

கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த

விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே

வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்

தாக்காதே தாக்குந் தனியே பராபரமே

பார்த்த இட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு

வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே.

அன்பைப் பெருக்கி என தாருயிரைக் காக்க வந்த

இன்பப் பெருக்கே இறையே பராபரமே!

(ii) தமிழ்விடு தூது :

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் மண்ணில்

குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ திறம்எல்லாம்

வந்து என்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்