Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆண்மையின் கூர்மை

அ) வறியவருக்கு உதவுதல்

ஆ) பகைவருக்கு உதவுதல்

இ) நண்பனுக்கு உதவுதல்

ஈ) உறவினருக்கு உதவுதல்

[விடை : ஆ) பகைவருக்கு உதவுதல்]

 

2. வறுமை வந்த காலத்தில் ---------- குறையாமல் வாழ வேண்டும்.

அ) இன்பம்

ஆ) தூக்கம்

இ) ஊக்கம்

ஈ) ஏக்கம்

[விடை : இ) ஊக்கம்]

 

3. 'பெருஞ்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பெரிய + செல்வம்

ஆ) பெருஞ் + செல்வம்

இ) பெரு + செல்வம்

ஈ) பெருமை + செல்வம்

[விடை : ஈ) பெருமை + செல்வம்]

 

4.  'ஊராண்மை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஊர் + ஆண்மை

இ) ஊ+ ஆண்மை

ஆ) ஊராண் + மை

ஈ) ஊரு + ஆண்மை

[விடை : அ) ஊர் + ஆண்மை]

 

5. திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) திரிந்ததுஅற்று

ஆ) திரிந்தற்று

இ) திரிந்துற்று

ஈ) திரிவுற்று

[விடை : ஆ) திரிந்தற்று]

 

பொருத்துக.

1. இன்பம் தருவது நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்

2. நட்பு என்பது குன்றிமணியளவு தவறு

3. பெருமையை அழிப்பது செல்வம் மிகுந்த காலம்

4. பணிவு கொள்ளும் காலம் சிரித்து மகிழ மட்டுமன்று

5. பயனின்றி அழிவது பண்புடையவர் நட்பு

விடை

1. இன்பம் தருவது பண்புடையவர் நட்பு

2. நட்பு என்பது சிரித்து மகிழ மட்டுமன்று

3. பெருமையை அழிப்பது குன்றிமணியளவு தவறு

4. பணிவு கொள்ளும் காலம் செல்வம் மிகுந்த காலம்

5. பயனின்றி அழிவது நற்பண்பில்லாதவன் வெற்ற பெருஞ்செல்வம்

 

குறுவினா

1. எது பெருமையைத் தரும்?

விடை

காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.

 

2. நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?

விடை

நமக்கு வரும் துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

 

3. இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?

விடை

இவ்வுலகம் பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இயங்குகிறது.

 

4. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

விடை

நட்பு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியதன்று. நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

 

படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.


விடை

கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்