3. பிரதியிடல் முறை அல்லது மாறியை மாற்றி அமைக்கும் முறை
தொகையிடலில் பிரதியிடல் முறையானது வகையிடலில் சார்பின் சார்புகளுக்கு வகையிடுதல் போன்றதாகும். பொருத்தமான பிரதியிடலைப் பயன்படுத்தித் தொகையிடலின் மாறியைப் புதிய மாறியாக மாற்றி அமைத்து எளிய முறையில் தொகையிடலாம்.

x = ϕ(u) அல்லது u = g(x) என்ற பொருத்தமான பிரதியிடலை தேர்வு செய்வதைச் சார்ந்து மேலே சொல்லப்பட்ட முறை எளிதாகிறது.
குறிப்பு 11.2
தொகையிடல் மாறியின் பிரதியிடல் முக்கோணவியல் சார்புகளாக இருந்தால் அதன் மறுபிரதியிடலின் மதிப்பைக் காண்பதற்கு மாதிரி வரைப்படத்தை பயன்படுத்தலாம். தொகை மாறி x-ஐ x = tan θ எனப் பிரதியிட, தொகையிடலுக்கு பிறகு தீர்வு secθ + cosecθ எனக் கிடைத்தால்,

