Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

 

கேட்க.

அறக்கருத்துகனை எடுத்துரைக்கும் கதைகளைப் பெரியோர்களிடம் கேட்டு மகிழ்க.

 

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

மக்கள் பணியே மகத்தான பணி!

விடை

அவையோர்க்கு வணக்கம் ! நான் மக்கள் பணியே மகத்தான பணி என்னும் தலைப்பில் பேச வந்துள்ளேன்.

தன்னையொத்த ஒரு மனிதன் பசித்திருக்கும் போது கடவுளுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாக ஒருவர் அளித்தால்அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன் தருவதில்லை. ஆனால் நடமாடும் கோயிலான பசித்த ஒரு மனிதனுக்கு ஒன்று கொடுத்தால்அது இறைவனுக்கும் சென்று சேரும் என்று திருமூலர் படமாடக் கோயில் என்ற பாடல் மூலம் கூறுவதே இத்தலைப்பிற்குப் பொருத்தமாகும்.

இறைவன் எப்போதும் தன் அடியவர்களிடத்தில் இது வேண்டும் அது வேண்டும் என்று எப்போதும் கேட்பதில்லை. ஆனால் சில பெருஞ்செல்வந்தர்கள்சில தொழிலதிபர்கள் தங்கள் அலுவலகத்திலோ தொழிற்சாலைகளிலோ பணிபுரிபவர்களுக்குப் போதுமான ஊதியத்தைக் கூட கொடுப்பதில்லை.

அவசரத் தேவைக்கு என்று கேட்பவருக்கு கடனாகக்கூட கொடுத்து உதவமாட்டார்கள். இ ஆனால் கோவில் உண்டியலிலும் பூசாரியின் தட்டிலும் பணத்தைத் தாராளமாகக் கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுடைய செல்வாக்கை காட்டுகின்றனர்.

இதனால் கடவுள் மகிழ்வாரா என்று கேட்டால் நிச்சயமாக மகிழமாட்டார். இறைவனை வழிபடுவதற்கு இந்த ஆடம்பரம் தேவையில்லை. பூ வைத்து இறைவனைத் தூய மனத்தோடு வழிபட்டாலேஇறையருள் கிட்டும். இதனை ஒவ்வொரு செல்வந்தரும் உணர வேண்டும்.

இறைவன் ஐம்பூதங்களை உருவாக்கியவர் மற்றும் அந்த ஐம்பூதங்களாகவும் விளங்குபவர் அப்படிப்பட்ட இறைவனுக்குச் செய்யும் பூசைகளை ஆடம்பரப்படுத்தாமல் – அல்லது விளம்பரப்படுத்தாமல் இருப்பது நல்லது. அதற்கு ஆகும் செலவினை ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம். அதனால் இறைவனை மகிழ்விக்கலாம்.

எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல்பணம்புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன்தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும் போதுஅவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான் என்று விவேகானந்தர் கூறுகிறார்.

இறைவன் தூணிலும் இருப்பார்துரும்பிலும் இருப்பார் என்பது போல உலக உயிர்கள் அனைத்திலும் இருக்கிறார். இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துநம்மைச் சுற்றியுள்ளவர்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சிறு உதவியைச் செய்தாலும் அவர்கள் மகிழ்வர். அந்த மகிழ்ச்சி இறைவனைப் போய்ச் சேரும்.

தூய்மையாக இருப்பதும்மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் நம் வாழ்வின் தவம் என்று உணர வேண்டும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பதே சிறந்த அறம் என எண்ணி வாழ வேண்டும். இவற்றையுணர்ந்து நாம் ஏழை எளியோருக்கு உதவி செய்து அவர்களின் சிரிப்பில் இறைவனை காண்போம்.

நன்றி!

 

சொல்லக் கேட்டு எழுதுக.

ஒரு நாட்டின் தலைவன் வீரம்விடாமுயற்சிஈகைஅராய்ந்து அறியும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றவனாக விளங்குதல் வேண்டும். அவன் அறம் அல்லாதவற்றை நீக்கிஅறத்தை நிலைநிறுத்த வேண்டும். தான் குற்றம் செய்யுமிடத்து நாணிதன் தகுதியை நிலைநிறுத்த வேண்டும். குற்றம் கண்டவிடத்துத் தானே நேரில் சென்று ஆராய்ந்துநெறிமுறை தவறாது நீதி வழங்குதல் வேண்டும். இவ்வாறு விளங்கும் தலைவனை மக்கள்துன்பம் போக்கும் இறை என்றும்இருளை அகற்றும் ஒளி என்றும் கொண்டாடுவர் என்று அயோத்திதாசர் கூறுகிறார்.

 

இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக.

(எ.கா) முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.

முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

1மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.

விடை : மழை நன்கு பெய்ததால் எங்களால் விளையாட முடியவில்லை.

 

2. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.

விடை : எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.

 

 

3. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

விடை : திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும்பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.

 

4. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.

விடை : அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்கவும் அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றவும் வேண்டும்.

 

5. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரச் கண்ணி நூலை இயற்றியுள்ளார்.

விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணிநந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

 

அறிந்து பயன்படுத்துவோம்

பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

விபத்தில்லா வாகனப் பயணம்

 சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்துவாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

 ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன்எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம்விட வேண்டும்.

 சந்திப்புச் சாலைகள்பயணிகள் கடக்கும் இடங்கள்திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும்.

 சாலைச்சந்திப்பில் நுழையும்போதுஅந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

 தீயணைப்பு வாகனம்அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துஅவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழிவிட வேண்டும்.

 எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

 மலைச்சாலைகள்மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள்மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

 

வினாக்கள்

1. விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?

விடை

சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

 

2. கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?

விடை

தீயணைப்பு வாகனம்அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகிய வாகனங்களுக்குக் கண்டிப்பாக . வழிவிட வேண்டும்.

 

3. சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?

விடை

சாலைச் சந்திப்புகளில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் தர வேண்டும்.

 

4. மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?

விடை

மலைச்சாலைகள்மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள்மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

 

5. வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.

விடை

i) ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன்எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.

(ii) சந்திப்புச் சாலைகள்பயணிகள் கடக்கும் இடங்கள்திரும்பும் இடங்கள் ஆகிய இடங்களில் வேகத்தைக் குறைத்து அங்கு இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

(iii) எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அறத்தால் வருவதே இன்பம்

 

கடிதம் எழுதுக.

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

விடை

25பிள்ளையார் கோயில் தெரு,

செங்கல்பட்டு ,

20-11-2020

 

அன்புள்ள மாமாவுக்கு ,

செழியன் எழுதும் கடிதம்நான் இங்கு நலமாக இருக்கிறேன். அம்மாஅப்பாதாத்தாபாட்டி மற்றும் அண்ணன் அனைவரும் நலமாக இருக்கிறோம். அங்கு நீங்களும் அத்தையும் நலமாக இருக்கிறீர்களா?

நீங்கள் எப்பொழுது ஊருக்கு வருவீர்கள்உங்களைப் பார்த்து நீண்ட நாட்களாயிற்று. பார்க்க வேண்டும் போல் உள்ளது. நான் இந்த ஆண்டு நடந்த எல்லாத் தேர்வுகளிலும் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளேன். என்னை என் பள்ளி ஆசிரியர்களும்வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டினர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

எனக்கு நான்கு நூல்கள் தேவைப்படுகின்றன. இங்குள்ள கடைகளில் கிடைக்கவில்லை. பொதுக்கட்டுரை புத்தகம்திருக்குறள் புத்தகம் (எளிமையான உரையுடன்)ஐம்பெருங்காப்பியங்கள் (கதைச் சுருக்கம்) கணினி தொடர்பான ஒரு புத்தகம் ஆகிய நூல்களை வாங்கி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள,

செழியன்

 

உறைமேல் முகவரி

அஞ்சல் தலை

திரு. கா.மாறன்,

எண்.65சன்னதி தெரு,

கும்பகோணம்.

 

மொழியோடு விளையாடு 

 

படத்தைப் பார்த்து எழுதுக.


ஓரெழுத்துச் சொல்

இரண்டு எழுத்துச் சொல்

மூன்று எழுத்துச் சொல்

நான்கு எழுத்துச் சொல்

ஐந்து எழுத்துச் சொல்

விடை


 

நிற்க அதற்குத் தக ...


என் பொறுப்புகள்...

1. அறக்கருத்துகளைப் படித்துவாழ்வில் பின்பற்றுவேன்.

2. அறவாழ்வு வாழ்ந்த சான்றோர்களைப்பற்றி அறிந்து போற்றுவேன்.

 

கலைச்சொல் அறிவோம்.

1. தொண்டு – Charity

2. ஞானி – Saint

3. தத்துவம் – Philosophy

4. நேர்மை – Integrity

5. பகுத்தறிவு – Rational

6. சீர்திருத்தம் – Reform

 

இணையத்தில் காண்க

சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த சான்றோர்களின் பெயர்ப்பட்டியலை இணையத்தில் தேடித் தொகுக்க.

 


கற்பவை கற்றபின்

 

1. எழுத்து இலக்கணத்தின்படியும் யாப்பு இலக்கணத்தின்படியும் எழுத்துகளின் வகைகளை வேறுபடுத்தி ஓர் அட்டவணை உருவாக்குக.

விடை

எழுத்து இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை :


யாப்பு இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை :


 

2. வெண்பாக்களால் அமைந்த நூல்களின் பெயர்களைத் திரட்டுக.

விடை

வெண்பாக்களால் அமைந்த நூல்கள் :

1. திருக்குறள்

2. நாலடியார்

3. முத்தொள்ளாயிரம்

4. நளவெண்பா

5. நீதிவெண்பா

6. மூதுரை

7. நல்வழி

8. நான்மணிக்கடிகை

9. இனியவை நாற்பத

10. இன்னா நாற்பது

11. திரிகடுகம்

12. ஆசாரக்கோவை

13. பழமொழி

14. சிறுபஞ்சமூலம்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்