Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | கோணமானியைப் பயன்படுத்திக் கோணத்தை அளத்தல்

வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - கோணமானியைப் பயன்படுத்திக் கோணத்தை அளத்தல் | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

கோணமானியைப் பயன்படுத்திக் கோணத்தை அளத்தல்

கோணத்தை நாம் எவ்வாறு அளக்கலாம்? கோணமானியைப் பயன்படுத்தி நாம் ஒரு கோணத்தை அளக்க முடியும்.

4. கோணமானியைப் பயன்படுத்திக் கோணத்தை அளத்தல்

கோணத்தை நாம் எவ்வாறு அளக்கலாம்? கோணமானியைப் பயன்படுத்தி நாம் ஒரு கோணத்தை அளக்க முடியும்.


கோணமானியில் ஒரு நடுப்புள்ளியும் ஓர் அடிப்பக்கக் கோடும் உண்டு. இதில் இரண்டு அளவுகோல்கள் உள்ளன. உள் அளவுகோல்முதல் 180° கடிகார எதிர்திசையிலும். வெளி அளவுகோல்முதல் 180° வரை கடிகார திசையிலும் இருக்கும். ஏன் கோணமானியானது 180° உடன் நின்றுவிடுகிறது? நாம் கோணமானியைச் சுழற்றி அளக்க முடியும் என்பதால், 180° என்பது போதுமானது ஆகும்.

கோணத்தை அளக்கும் வழிமுறைகள்

படி 1 : கோணமானியின் நடுப்புள்ளியைக் கோணத்தின் உச்சியிலும் கோணத்தின் அடிபக்கக் கோடுஉடன் சேருமாறு வைக்க வேண்டும்.

படி 2 : மற்றொரு கதிரானது கோணமானியை வெட்டும் கோண அளவை நாம் குறிக்கலாம்.


5. கோணமானியைப் பயன்படுத்திச் செங்கோணத்தை (90°) வரைதல்

எடுத்துக்காட்டு 4.2

கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 90° வரைதல்.


6. கோணமானியைப் பயன்படுத்திக் குறுங்கோணத்தை வரைதல்

எடுத்துக்காட்டு 4.3

கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 45° வரைதல்.



7. கோணமானியைப் பயன்படுத்தி விரிகோணத்தை வரைதல்

எடுத்துக்காட்டு 4.4

கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 120° வரைதல்.


உங்களுக்குத் தெரியுமா?

180° இக்கும் அதிகமான கோண அளவு பின்வளை கோணம் எனப்படும். கொடுக்கப்பட்ட கோணத்தை, 360° கோணத்தில் இருந்து கழிக்க பின்வளை கோணம் கிடைக்கிறது.


இவற்றை முயல்க

கீழே கொடுக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்பக் கடிகார முட்களைத் திருப்புக. கடிகாரத்தில் மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையே ஏற்படும் கோண அளவுகளைக் கொண்டு, அதன் கோண வகையினை பின்வருமாறு எழுதுக.



செயல்பாடு

கோட்டுத்துண்டு எடுத்துக் கொள்க. மேலும் மற்றொரு கோட்டுத்துண்டு யும் அமைக்க. இடப்புறமாகச் சுழற்றுக.


இவ்வாறான சுழற்சியில், ஒரு நிகழ்வில் ஆனது இன் மீது பொருந்தும். பிறகு திரும்பவும் பழைய நிலையை அடையும். ஆகவே கோணம் அதிகரித்துக்கொண்டே சென்று, குறிப்பிட்ட ஒரு புள்ளியில் மீண்டும்அடையும்.


இது அறிந்ததாக உள்ளதா? ஆம். கடிகாரத்தில் பார்த்து இருப்பீர்கள்.

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்