வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - சிறப்புச் சோடிக் கோணங்கள் | 6th Maths : Term 1 Unit 4 : Geometry
9. சிறப்புச் சோடிக் கோணங்கள்
இரு கோணங்களின் கூட்டுத் தொகை 90° எனில், அவ்விரு கோணங்கள் ஒன்றுக்கொன்று நிரப்புக் கோணங்கள் (படம் 4.28 (i) ஐப் பார்க்க) ஆகும். அதுவே இரு கோணங்களின் கூட்டுத் தொகை 180° எனில், அவ்விரு கோணங்கள் ஒன்றுக்கொன்று மிகை நிரப்புக் கோணங்கள் (படம் 4.28 (ii) ஐ பார்க்க) ஆகும்.

மேற்காணும் படத்தில், 20° மற்றும் 70° ஆகியன நிரப்புக் கோணங்கள் ஆகும். 147° மற்றும் 33° ஆகியன மிகை நிரப்புக் கோணங்கள் ஆகும். ஆனால் 35° மற்றும் 75° ஆகியன நிரப்புக் கோணங்களோ, மிகை நிரப்புக் கோணங்களோ அன்று.