Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | இரண்டு கோடுகள்

வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - இரண்டு கோடுகள் | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

இரண்டு கோடுகள்

இரண்டு கோடுகளை மீண்டும் எடுத்துக்கொள்வோம் (படம் 4.14). அக்கோடுகள் நாம் வரையறுத்தவாறு, இருபுறங்களிலும் முடிவின்றி ஒன்றையொன்று சந்திக்காமல் சென்று கொண்டே இருக்கின்றன. இவ்விரு கோடுகளுக்கும் இடையே மாறாதச் செங்குத்துத் தொலைவு உள்ளது. எனவே இவ்விரு கோடுகள், "இணை கோடுகள்" எனப்படுகின்றன.

3. இரண்டு கோடுகள்


இரண்டு கோடுகளை மீண்டும் எடுத்துக்கொள்வோம் (படம் 4.14). அக்கோடுகள் நாம் வரையறுத்தவாறு, இருபுறங்களிலும் முடிவின்றி ஒன்றையொன்று சந்திக்காமல் சென்று கொண்டே இருக்கின்றன. இவ்விரு கோடுகளுக்கும் இடையே மாறாதச் செங்குத்துத் தொலைவு உள்ளது. எனவே இவ்விரு கோடுகள், "இணை கோடுகள்" எனப்படுகின்றன. அவ்வாறு செல்லும்போது இணையாக உள்ள இரண்டு கோடுகளைப் பெற முடியும்.


இணை கோடுகள் ஒன்றையொன்று சந்திக்காமல் சென்று கொண்டே இருக்கும்.

இரண்டு கோடுகள் இணையாக இல்லையென்றால் எவ்வாறு இருக்கும்?

பின்பு அவை, ஓர் இடத்தில் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ள வேண்டும். அவை சந்தித்த பிறகும் நீண்டு கொண்டே செல்லும்.


இங்கு கோடுகள் l1 மற்றும் l2 ஆகியவை "வெட்டும் கோடுகள்" எனப்படுகின்றன. கோடுகளைப் போலவே, இணை கோட்டுத்துண்டுகள் மற்றும் வெட்டும் கோட்டுத்துண்டுகளையும் (படம் 4.16) நாம் பெற முடியும்.


மற்றும் என்ற இரண்டு கோட்டுத் துண்டுகள் O என்ற புள்ளியில் வெட்டிக்கொள்வதால், அப்புள்ளி "வெட்டும் புள்ளி" எனப்படும்.

செயல்பாடு


இணை கோடுகள் மற்றும் வெட்டும் கோடுகளுக்கான காகித மடிப்புச் செயல்பாடு: ஒரு காகிதத் துண்டினை எடுத்துக்கொண்டு, இணை கோடுகளை அல்லது வெட்டும் கோடுகளைப் பெறுமாறு பல வழிகளில் மடிக்கவும். ஒரு சில எடுத்துக்காட்டுகளைப் படத்தில் காணலாம்.

குறிப்பு

கோட்டிற்கு முடிவுப் புள்ளிகள் இல்லை. ஆனால், கோட்டுத்துண்டிற்கு முடிவுப் புள்ளிகள் உண்டு ஒரு கோட்டுத் துண்டின் நீளத்தை அளக்க முடியும். (படத்தைப் பார்க்க).


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்