பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - வடிவியல் | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

வடிவியல்

கற்றல் நோக்கங்கள் ● கோடுகள், கோட்டுத் துண்டுகள் மற்றும் கதிர்கள் பற்றி அறிதல். ● கோணங்கள் மற்றும் அதன் வகைகளை அறிதல். ● அளவுகோல் மற்றும் கோணமானியைப் பயன்படுத்துதல். ● இணைகோடுகள் மற்றும் வெட்டும் கோடுகளைக் கண்டறிதல். ● நிரப்புக் கோணம் மற்றும் மிகை நிரப்புக் கோணச் சோடிகளைக் கண்டறிதல். ● ஒரு கோடமைப் புள்ளிகள் மற்றும் ஒருங்கமைப் புள்ளிகள் பற்றி அறிதல்.

இயல் 4

வடிவியல்



கற்றல் நோக்கங்கள்

கோடுகள், கோட்டுத் துண்டுகள் மற்றும் கதிர்கள் பற்றி அறிதல்

கோணங்கள் மற்றும் அதன் வகைகளை அறிதல்.

அளவுகோல் மற்றும் கோணமானியைப் பயன்படுத்துதல்.

இணைகோடுகள் மற்றும் வெட்டும் கோடுகளைக் கண்டறிதல்.

நிரப்புக் கோணம் மற்றும் மிகை நிரப்புக் கோணச் சோடிகளைக் கண்டறிதல்

ஒரு கோடமைப் புள்ளிகள் மற்றும் ஒருங்கமைப் புள்ளிகள் பற்றி அறிதல்.


அறிமுகம்


வடிவியல் என்பது புவியின் அளவீடு ஆகும். இது வடிவங்களின் பண்புகளையும், அவற்றின் அளவைகளையும் உள்ளடக்கியதாகும். பழங்காலங்களில் கட்டுமானத்திற்கும், நிலங்களை அளப்பதற்கும், பல்வேறு கைவினைத் தொழில்கள் போன்ற செயல்களின் தேவைகளுக்கும், வடிவியல் உருவாக்கப்பட்டது.

இயற்கை, சிறிய அணுவிலிருந்து பெரிய அண்டங்கள் வரை வடிவியல் வடிவங்களையும் அமைப்புகளையும் கொண்டு பரிணமிக்கிறது. உன் சுற்றுப்புறத்தில் நீ காணும் பொருட்களில் வடிவியலின் தாக்கம் இருக்கிறது. வடிவியல் எண்ணங்களே வீடுகள் மற்றும் கட்டடங்களின் அழகிய தோற்றத்தை வடிவமைக்க உதவுகின்றன. மிதிவண்டி, மகிழுந்து, பேருந்து போன்ற வாகனங்களின் வடிவமைப்பிற்கும் வடிவியல் கருத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நீ விளையாடப் பயன்படுத்தும் பொம்மைகள், நீ பயன்படுத்தும் எழுதுகோல், அளவுகோல் மற்றும் நூல்கள் இவை வடிவியல் கருத்துகள் மற்றும் வடிவங்களைத் தெளிவுபடுத்துகின்றன.

இந்த இயலில் வடிவியல் கருத்துகளான கோடுகள், கோட்டுத் துண்டுகள், கதிர்கள் மற்றும் கோணங்களை அறிய இருக்கிறோம்.

எங்கும் கணிதம்அன்றாட வாழ்வில் புள்ளியியல்


தேன் கூட்டில் அறுங்கோண வடிவம்


கலையில் வடிவியல் அமைப்புகள்

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்