Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | ஓரினப் பின்னங்களை ஒப்பிடுதல்

பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - ஓரினப் பின்னங்களை ஒப்பிடுதல் | 5th Maths : Term 3 Unit 6 : Fractions

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்

ஓரினப் பின்னங்களை ஒப்பிடுதல்

ஓரினப் பின்னங்களை ஒப்பிடுவதற்கு கொடுக்கப்பட்டப் பின்னங்களின் தொகுதிகளைச் சரிபார்க்கவும்.

ஓரினப் பின்னங்களை ஒப்பிடுதல்.

ஓரினப் பின்னங்களை ஒப்பிடுவதற்கு கொடுக்கப்பட்டப் பின்னங்களின் தொகுதிகளைச் சரிபார்க்கவும்.


எடுத்துக்காட்டு 6.9

பின்வரும் படத்தில் நிழலிடப்பட்ட மற்றும் நிழலிடப்படாத பகுதிகளை ஒப்பிடவும்.


தீர்வு

ஒரு பட்டை 7 சம பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பகுதியும் எனக் குறிப்பிடுகிறது.

வண்ணமிடப்பட்டப் பகுதி

வண்ணமிடப்படாதப் பகுதி

வண்ணமிடப்பட்டப் பகுதி வண்ணமிடாத பகுதியை விடச் சிறியது.

இங்கு விட சிறியது எனக் காட்டுகிறது.

இதனை < என எழுதலாம்.


எடுத்துக்காட்டு 6.10

பின்வரும் படத்தில் வெவ்வேறு வண்ணமிடப்பட்டப் பகுதிகளை ஒப்பிடுக.


தீர்வு

இந்த பட்டையானது 5 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 5 இல் 2 பங்குகள் நீல நிறத்திலும் 1 பங்கு மஞ்சள் நிறத்திலும் வண்ணமிடப்பட்டுள்ளது.

நீல நிறத்தில் வண்ணமிடப்பட்டப் பங்குகளின் பின்னம் =

மஞ்சள் நிறத்தில் வண்ணமிடப்பட்டப் பங்கின் பின்னம் =

தொகுதிகளான 2 மற்றும் 1 ஒப்பிட்டுப் பார்க்கையில், 2 > 1 என அறிகிறோம்.

எனவே, > 

ஓரின பின்னங்களில் பெரிய தொகுதியைக் கொண்ட பின்னமே பெரிய பின்னமாகும்.

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 6 : பின்னங்கள்