வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - கோடுகள் – விளக்கம் | 6th Maths : Term 1 Unit 4 : Geometry
கோடுகள் – விளக்கம்
ஒரு கோடானது பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். கோடு கிடைமட்டமாகவோ, சாய்வாகவோ, செங்குத்தாகவோ இருக்கலாம். ஒரு கோட்டினை எத்திசையில் திருப்பினாலும் அது கோடாகவே இருக்கும். எனவே, கீழே கொடுக்கப்பட்ட அனைத்துமே (படம் 4.3) கோடுகள் ஆகும்.

ஆனால், பின்வருபவை (படம் 4.4) நேர் கோடுகள் அல்ல.

கோட்டின் நீளத்தைத் தவிர்த்தால் படம் 4.5 இல் காட்டியுள்ளவாறு அவற்றை இரு திசைகளிலும் முடிவில்லாமல் நீட்ட முடியும். இரண்டு புள்ளிகள் A மற்றும் B வழியே செல்லும் கோட்டினை
அல்லது
என்று எழுதலாம். மேலும், இதை l என்ற எழுத்தால் குறிப்பிடலாம்.
