கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 3.10 : காரணிப்படுத்தல் முறையில் இருபடிச் சமன்பாட்டின் தீர்வு காணுதல் | 10th Mathematics : UNIT 3 : Algebra
பயிற்சி 3.10
1. காரணிப்படுத்தல் முறையைப் பயன்படுத்திப் பின்வரும் இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்க
(i) 4x2 − 7x − 2 = 0
(ii) 3(p2 − 6) = p(p + 5)
(iii) √[a (a − 7)] = 3√2
(iv) √2x2 + 7 x + 5√2 = 0
(v) 2x2 − x + 1/8 = 0

2. n அணிகள் பங்குபெறும் ஒரு கையுந்து விளையாட்டு (Volley ball) போட்டியில் ஒவ்வோர் அணியும் மற்ற அனைத்து அணிகளோடும் விளையாட வேண்டும். 15 போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கை G (n) = [n2 –n] / 2 எனில், பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை எத்தனை?

விடைகள்:
1. (i) -1/4,2 (ii) -2, 9/2 (iii) -2,9 (iv) -√2, -5/√2 (v) 1/4, 1/4
2. 6