வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - கதிர்கள் | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

கதிர்கள்

கோடுகளின் ஒரு முனை முடிவுற்றும் அடுத்த முனை முடிவுறாமல் தொடர்ந்தால் என்னவாகும்? அவற்றை நாம் "கோடுகள்" என்று அழைப்பதில்லை.

4. கதிர்கள்


கோடுகளின் ஒரு முனை முடிவுற்றும் அடுத்த முனை முடிவுறாமல் தொடர்ந்தால் என்னவாகும்? அவற்றை நாம் "கோடுகள்" என்று அழைப்பதில்லை. அவற்றைக் "கதிர்கள்" என்று அழைக்கிறோம். இதனை எனக் குறித்துக் காட்டுகிறோம். ஒரு கதிரின் முடிவுறுப் புள்ளியை தொடக்கப் புள்ளி என்கிறோம். (படம் 4.17 இல் காணலாம்).



5. இரண்டு கதிர்கள்


இரண்டு கதிர்களைக் கொண்டு மேலும் பல செயல்பாடுகளைச் செய்யலாம். படத்திலுள்ளவாறு அக்கதிர்கள் இணையாகவோ, ஒன்றோடு ஒன்று வெட்டிக்கொள்பவையாகவோ இருக்கலாம்.


இரண்டு கதிர்கள் ஒரே தொடக்கப் புள்ளியினைப் பெற்றிருக்கலாம். (படம் 4.19)


இவற்றை முயல்க


கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள கதிர்களுக்குப் பெயரிடுக.

இக்கதிர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவான புள்ளி எது?

விடை:   எல்லாவற்றிற்கும் பொதுவான புள்ளி T.

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்